வறட்சியை சமாளிக்க ‘குடிமராமத்து’ திட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் வறட்சியைச் சமாளிக்கவும், நீர்நிலைகளை புனரமைக்கவும் பண்டைய “குடிமராமத்து” திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார்.

இத்திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங்களில் ஆயிரத்து 159 பணிகள் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

கடந்தாண்டு வடகிழக்கு பருவமழை தவறியதால் இதுவரை இல்லாத அளவுக்கு வறட்சி தமிழ்நாட்டில் நிலவுகிறது. அதனால் மாநிலத்தில் உள்ள நீர் ஆதாரங்களை சிக்கனமாக பயன்படுத்தி இந்த வறட்சியை எதிர்கொள்ளவும், மழைநீரை திறம்பட சேமித்தும், புதிய நீர் ஆதாரங்களை உருவாக்கி நீர்வள ஆதார மேலாண்மை மேம்படுத்தவும், நீர் பயன்பாட்டை முறையாக ஒழுங்குபடுத்தவும், நீர் நிலைகளை மீட்டெடுப்பதற்கும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கென அரசில் இருந்து ஓய்வுபெற்ற பொறியியல் வல்லுனர் களைக் கொண்ட ஒரு ஆலோ சனைக் குழுவை அமைத்து, அதற் கான திட்டங்களையும், உத்தி களையும், வழிமுறைகளையும், கொள்கைகளையும் இக்குழு மூலம் வரையறுத்து அதை அரசு உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ளும். நீர்வள ஆதாரங்களை மேலாண்மை செய்யும் பேரியக் கத்தின் ஒருபகுதியாக முதல்கட்ட மாக பயனீட்டாளர்களின் பங் களிப்புடன் நீர் நிலைகளை புனர மைக்க பண்டைய “குடிமராமத்து” திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

‘குடிமராமத்து’ திட்டத்தின் மூலம் நடப்பு நிதியாண்டில் 30 மாவட்டங் களில் ஆயிரத்து 159 பணிகள் ரூ.100 கோடியில் செயல்படுத்தப்படும். பெரும் பாலான பணிகளும் ரூ.10 லட்சத்திற்கு குறைவான மதிப்பீடு என்பதால் பயனாளிகளால் நேரடி யாக ஒரேநாளில் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் ஒரு மக்கள் இயக்கமாக ஒரே சமயம் செயல்படுத்தப்படும்.

வரும் நிதியாண்டுகளில் கூடுத லாக நிதி ஒதுக்கீடு செய்து ‘குடி மராமத்து’ப் பணிகள் நபார்டு நிதி யுதவியுடன் மேற்கொள்ளப்படும். வரும் 2017-2018-ம் ஆண்டில் இதுபோன்ற பணிகள் ரூ.300 கோடியில் ஏப்ரல், மே மாதங்களில் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் தொடங்கப்பட்டு மக்கள் இயக்கமாக செயல்படுத்தப்படும்.

‘குடிமராமத்து’ திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி வைப்பார். அன்று மாநிலத்தின் அனைத்துப் பகுதி களிலும் மக்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் பயனாளிகளால் பொதுப்பணித் துறை உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப் பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

24 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

14 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

மேலும்