ஜூலை 22 முதல் 24 வரை: மலேசியாவில் உலக கொங்கு தமிழர் மாநாடு

By செய்திப்பிரிவு

ஜூலை 22, 23, 24 ஆகிய தேதி களில் மலேசியாவில் உலக கொங்கு தமிழர்கள் மாநாடு நடைபெறும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்தின் மேற்கு பகுதி யான கொங்கு மண்டலத்தில் இருந்து உலகம் முழுவதும் சென்று பல்வேறு நாடுகளில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்கள் அனைவரும் ஓரிடத்தில் சங்கமிக்க ஜூலை 22, 23, 24 ஆகிய தேதி களில் மலேசிய தலைநகர் கோலா லம்பூரில் உலக கொங்கு தமி ழர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. கொங்கு பண்பாட்டையும், கலாச் சாரத்தையும் பறைசாற்றும் வகை யில் இந்த மாநாடு நடைபெறும்.

1965-ல் மலேசியாவில் தொடங் கப்பட்ட மலேசிய நாமக்கல் நல அபிவிருத்தி மன்றம் 60 ஆண்டு களை நிறைவு செய்துள்ளது. இதன் வைர விழாவை முன்னிட்டு உலக கொங்கு தமிழர்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தி யாவில் இருந்து நானும் மாநாட் டுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறேன்.

இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 2 ஆயிரம் பேர் மாநாட்டில் பங்கேற்பார்கள். உலகெங்கும் இருந்து 15 ஆயிரம் பேர் பங்கேற்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தி னராக மலேசிய பிரதமர் நஜீப் ரசாக் பங்கேற்கிறார். 24-ம் தேதி தொழிற்துறையினர் சந்திப்பு நடைபெறுகிறது. இதில் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், துபாய், தென்னாப்பிரிக்கா, ஆஸ்தி ரேலியா உள்ளிட்ட நாடுகளில் தொழில் புரியும் 500-க்கும் அதிகமான கொங்கு தொழில திபர்கள் பங்கேற்க உள்ளனர்.

இவர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி அதனை தொழில் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ள இந்த சந்திப்பு வழி வகுக்கும். இதற்காக தமிழகத் திலிருந்து 200 தொழிலதிபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 mins ago

இந்தியா

12 mins ago

இந்தியா

24 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

கருத்துப் பேழை

25 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

மேலும்