உயர் நீதிமன்றங்களில் சம ஊதியம் கோரி ஊழியர் கூட்டமைப்பு தலைவர் டெல்லிக்கு நடைபயணம்

By செய்திப்பிரிவு

நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்து, ஒரேமாதிரியான ஊதியம் வழங்கக் கோரி அகில இந்திய கூட்டமைப்பின் தலைவர், சத்தீஸ்கரில் இருந்து டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக அகில இந்திய உயர் நீதிமன்ற ஊழியர்கள் கூட்டமைப் பின் துணைத் தலைவரும், சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் சங்கச் செய லாளருமான வெங்கடசுப்பிரமணியன் கூறியதாவது:

நாடு முழுவதும் உள்ள உயர் நீதி மன்றங்களில் பணிபுரியம் ஊழியர் களுக்கு ஒவ்வொரு மாதிரியான ஊதியம் வழங்கப்படுகிறது. டெல்லி, மும்பை, கொல்கத்தாவில் பணிபுரிபவர்களுக்கு ஒருமாதிரியாகவும், சென்னை உள்ளிட்ட பிற இடங்களில் பணிபுரிபவர்களுக்கு வேறுமாதிரியாகவும் ஊதியம் வழங்கப் படுகிறது. இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியையும், மத்திய அரசையும் எங்கள் கூட்டமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மத்திய நிதியமைச்சர், மத்திய சட்டத்துறை அமைச்சர், அனைத்து மாநில முதல்வர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த ஊதிய முரண்பாடுகளை சரிசெய்யக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எங்களது அகில இந்திய கூட்டமைப்பின் தலைவர் பிரமோத் குமார் பதக், சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து டெல்லிக்கு நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நடைபயணம் வரும் 30-ம் தேதி டெல்லியில் முடிவடைகிறது. மறுநாள் ஜூலை 1-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் அகில இந்திய நிர்வாகிகள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடக்க உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

11 mins ago

சினிமா

29 mins ago

வாழ்வியல்

11 mins ago

தமிழகம்

47 mins ago

க்ரைம்

54 mins ago

வணிகம்

58 mins ago

சினிமா

55 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்