தகுதியான ஒப்பந்ததாரர்கள் பதிவு செய்யப்படுவார்கள்: அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதி

By செய்திப்பிரிவு

பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரர்களில் தகுதி யானவர்கள் பதிவு செய்யப் படுவார்கள் என சட்டப் பேரவையில் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரி வித்தார்.

சட்டப்பேரவையில் நடந்த விவாத விவரம்:

நந்தகுமார் (திமுக):

ஆண்டு தோறும் செப்டம்பர், அக் டோபர் மாதங்களில் சாலைப் பணிகளுக்கான ஒப்பந்தம் கோரப்படும். ஆனால், கடந்த ஆண்டுக்கான ஒப் பந்தங்கள் இதுவரை கோரப் படவில்லை.

அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

தற்போது ஒப்பந் தம் கோரப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இறுதி செய்யப்படும். உறுப்பினர் ஒப்பந்ததாரர் என்பதால் இதை கேட்கிறார். ஒப்பந்த பணிகள் தொடங்கப்பட் டுள்ளன.

நந்தகுமார்:

பல பணி களுக்கான நிலுவைத் தொகைகள் இன்னும் வழங் கப்படவில்லை.

எடப்பாடி பழனிசாமி:

கடந்த ஆண்டு தாமதமாகத்தான் மானிய கோரிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன் பின்னரே நிதி ஒதுக்கப் பட்டது. விரைவில் ஒப் பந்ததார்களுக்கான தொகை வழங்கப்படும்.

நந்தகுமார்:

புதிய ஒப் பந்ததார்கள் பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி:

பணிக்கு ஒதுக்கப்படும் நிதிக்கு ஏற்ப ஒப்பந்ததாரர்கள் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் ஒவ்வொரு நிலையிலும் அதற்கான பணிகளை எடுத்து செய்து முடித்திருக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் பதிவு செய்யப்படுகி்ன்ற னர்.

நந்தகுமார்:

படிப்படியாக ஒப்பந்ததார்கள் பதிவு செய்யப்பட வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி:

எல்லோரும் ஒப்பந்ததாரர்கள் ஆகிவிட்டால், கட்டப் பஞ்சாயத்து நடக்கும் சூழல் உருவாகும். அதனால்தான் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படுகிறது. தகுதியானவர்கள் நிச்சயமாக ஒப்பந்ததாரர்களாக பதிவு செய்ய அனுமதிக்கப்படு வார்கள்.

இவ்வாறு சட்டப் பேரவை யில் நேற்று விவாதம் நடந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்