கேரளாவை கண்டித்து கோவையில் 20-ம் தேதி மதிமுக ஆர்ப்பாட்டம்

By செய்திப்பிரிவு

பவானி ஆற்றின் குறுக்கே கேரளா புதிய தடுப்பணை கட்டுவதை கண்டித்து கோவையில் வருகிற 20-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட் டுள்ள அறிக்கை:

பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை என்ற இடத்திலும் மஞ்சக்கண்டி என்ற இடத்திலும் தடுப்பு அணை கட்டும் பணிகளை கேரள அரசு தொடங்கியுள்ளது. மேலும் பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாலையூர் ஆகிய இடங்களிலும் தடுப்பு அணை கட்டப் போவதாகத் தகவல் வந்துள்ளது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தைக் கவனத்தில் கொண்டு கேரள அரசு இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். தமிழகத்தின் இசைவு இல்லாமல், பவானி ஆற்றின் குறுக்கே எந்த ஒரு தடுப்பு அணையையும் கட்டக் கூடாது. கேரள அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும், இதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், ஜனவரி 20-ம் தேதி (வெள்ளிக்கிழமை) கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இதில் மதிமுகவினரும், விவசாயி களும் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்