இன்று உலக சுற்றுச்சூழல் தினம்: இலவச மரக்கன்றுகள் வழங்குவதன் நோக்கம் நிறைவேறியதா ?

By ஜி.ஞானவேல் முருகன்

முறையாக நட்டு பராமரிக்க முடியும் என்றால் மட்டுமே இலவசமாக கிடைக்கும் மரக்கன்றுகளை வீட்டுக்கு எடுத்துச் செல்லுங்கள் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

இவ்வுலகில் மரங்களுக்கும் மனிதனுக்கும் இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. மாறிவரும் தட்பவெப்ப சூழ்நிலையில், சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதில் மரங்களே முதலிடம் வகிக்கின்றன.

நம் நாட்டில் நகர்மயமாக்கல், சாலை விரிவாக்கம் உட்பட பல் வேறு காரணத்தால் நாள்தோறும் மரங்கள் வெட்டி வீழ்த்தப்படுகின் றன. இவற்றை ஈடுகட்டும் நோக் கில் வனத் துறை, வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட அரசுத் துறைகள் மற்றும் தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் மரக் கன்றுகள் நடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

இது மட்டுமின்றி மரம் வளர்ப் பதை ஊக்குவிக்கும் வகையில், திருமணம், பிறந்த நாள் போன்ற நிகழ்வுகளில் இலவசமாக மரக் கன்று வழங்குவதை பலரும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இலவசமாக கிடைக்கும் மரக்கன்று களைப் பெறும் அத்தனை பேரும் முறையாக நட்டுப் பராமரிக்கின் றனரா என்றால், இல்லை என்பதே உண்மையாக உள்ளது.

கடந்த காலங்களில் இலவசமாக வழங்கப்பட்டு, நடப்பட்ட மரங்கள் எல்லாம் வளர்ந்திருந்தால் நம் நாட்டின் பெரும்பகுதி காடுபோல காட்சியளித்திருக்கும். ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை.

மரக்கன்று வழங்குவோர் தங்க ளின் நோக்கம் நிறைவேறும் வகை யில், அவற்றை வாங்கிச் செல்லும் பொதுமக்களுக்கு, மரக்கன்றை மரமாக மாற்றும் விதத்தைக் கற்றுத்தர முயல வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

இதுகுறித்து தமிழ்நாடு இயற்கை பாதுகாப்பு சங்கத் தலைவர் வ.சுந்த ரராஜூ கூறும்போது, “முதலில் மண் ணுக்கேற்ற மரங்களைத் தேர்ந் தெடுத்து வளர்க்க வேண்டும். வேம்பு, புங்கன், நாவல், இலுப்பை, தேக்கு, மகோகனி, குமிழ், மரமல்லி, சரக்கொன்றை, செண்பகம், மகிழம், பூவரசு போன்ற மரக்கன்றுகளை நடுவதற்கு 2-க்கு 2 சதுர அடியில் 2 அடி ஆழம் கொண்ட குழி தோண்டுவது அவசியம்.

அதில் ஒரு தட்டு தொழு உரம் இட்டு, மரக்கன்றுடன் கூடிய தாய்மண் சிதறாமல் குழியின் நடுவில் வைத்து, சுற்றிலும் மணல், செம்மண் கலந்து நன்கு மிதித்து விட வேண்டும். பின் ஒரு குடம் தண்ணீர் ஊற்றினால் போதும்.

ஆடு, மாடு போன்ற விலங்கு களிடம் இருந்து காப்பாற்ற சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். செலவாகும் என்று நினைத்தால் கருவேல முள் செடியை வெட்டி சுற்றிலும் வேலி அமைக்கலாம். நாள்தோறும் தண்ணீர் விட்டு பராமரித்தால் மூன்று ஆண்டுகளில் பலன்தரும் மரமாக மாறிவிடும்.

ஆல், அரசு போன்ற மரக்கன்று கள் நட வேண்டுமெனில் 3-க்கு 3 அடி அளவில் குழி தோண்ட வேண்டும். தொழு உரம் சற்று கூடுதலாக தேவைப்படும். உரிய முறையில் மரக்கன்று நடாவிட்டால் அதனால் பயனில்லை. போதிய இடம் இல்லை என்றால் இலவச மாகக் கிடைக்கும் மரக்கன்றுகளை வாங்காதீர்.

வணிக நிறுவனங்கள், நிகழ்ச்சி நடத்துபவர்கள் இலவசமாக மரக் கன்று வழங்கும்போது அவற்றை நட்டு வளர்க்கும் முறை குறித்த கையேடு ஒன்றை மக்களுக்கு வழங்க வேண்டும். போதிய இடம் இல்லாதவர்களுக்கு தொட்டியில் வளரும் தன்மை கொண்ட துளசி, ஓமவல்லி, தூதுவளை போன்ற மூலிகைச் செடிகள் அல்லது செம்பருத்தி, ரோஜா போன்ற மலர்ச் செடிகளை வழங்கலாம்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

37 mins ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

44 mins ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்