விதிகளை மீறி மணிக்கணக்கில் நிறுத்துவதால் ஜிஎஸ்டி சாலையில் ஆம்னி பேருந்துகளால் நெரிசல்: போலீஸார் கண்டுகொள்ளவில்லை என புகார்

By செய்திப்பிரிவு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் இரவு நேரங்களில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளால் தினசரி கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படு கிறது. இதுகுறித்து போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்வதில்லை என புகார் எழுந்துள்ளது.

சென்னையின் நுழைவாயிலான தாம்பரத்தில் நிரந்தர பேருந்து நிறுத்தம் கிடையாது. ஜிஎஸ்டி சாலையில், காந்தி சாலை சந்திப்பு முதல் முடிச்சூர் சாலை சந்திப்பு வரை உள்ள பேருந்து நிறுத்தங்களில் சாலையிலேயே பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஆம்னி பேருந்துகள் ஏற்றுகின்றன. பேருந்துகள் வரிசை கட்டி நீண்ட நேரம் நிறுத்தப்படுவதால் ஜிஎஸ்டி சாலையில் பள்ளி, கல்லூரி, அலுவலக நேரங்களில் கடும் நெரிசல் ஏற்படுகிறது.

தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்துகள் நிற்கும் இடங்களில் ஆம்னி பேருந்து டிக்கெட் கவுன்ட்டர்கள் உள்ளன. சென்னையில் இருந்து புறப்பட்டு வெளியூர்களுக்கு காலியாகச் செல்லும் ஆம்னி பேருந்துகள் தாம்பரம் வந்ததும் பயணிகளை நிரப்ப வேண்டும் என்பதற்காக, அரசு பேருந்துகள் நிற்கும் இடங்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அரசு பேருந்துகளுக்கு அருகிலேயே சாலையைப் பெருமளவில் ஆக்கிரமித்து நீண்ட நேரம் நிறுத்தி பயணிகளை ஏற்றுவதால் ஜிஎஸ்டி சாலை எப்போதும் நெரிசலாகவே காணப்படுகிறது.

ஆம்னி பேருந்துகள் ஜிஎஸ்டி சாலை வழியாக வெளியூர்களுக்குச் செல்லலாம். ஆனால், சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றக்கூடாது என்ற உத்தரவு ஏற்கனவே அமலில் உள்ளது. ஆனால் இதனை மீறி தாம்பரம் பெருங்களத்தூர் பகுதி களில் ஆம்னி பேருந்துகள் மணிக் கணக்கில் நிறுத்தப் படுகின்றன.

இதனால், சமீபகாலமாக வழக்கத்தைக் காட்டிலும் அதிக வாகன நெரிசல் ஏற்படுகிறது. காந்தி சாலை சந்திப்பு முதல், முடிச்சூர் மேம்பாலம் வரை, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இரவு நேரங்களில் தாம்பரத்தை வாகனங்கள் கடந்து செல்ல குறைந்த பட்சம் 30 முதல் 40 நிமிடங்கள் வரை ஆகிறது.

ஆம்னி பேருந்துகளின் இத்த கைய போக்கைப் போக்குவரத்து போலீஸார் கண்டுகொள்வதில்லை என பாதிக்கப்படும் பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே, உயர் அதிகாரிகள் இப்பிரச்சினை யில் தலையிட்டு உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தாம்பரம் போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ஜெயவேல் கூறும்போது, ‘இதுகுறித்து விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

சினிமா

29 mins ago

வாழ்வியல்

1 hour ago

உலகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

மேலும்