உடுமலை சங்கர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு பதிவு

By செய்திப்பிரிவு

திருப்பூர் மாவட்டம் உடுமலை குமரலிங்கத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவர், கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில், கடந்த மார்ச் 13-ம் தேதி சங்கர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கவுசல்யா பலத்த காயமடைந்தார்.

உடுமலை போலீஸார் வழக்கு பதிவுசெய்து கவுசல்யாவின் தந்தை சின்னசாமி(49), தாய் அன்னலட்சுமி(42), மாமா பாண்டி துரை(39) மற்றும் எம்.மணிகண்டன்(25), எம்.மைக்கேல் (எ) மதன்(25), பி.செல்வக்குமார்(26), பி.ஜெகதீசன்(31), தன்ராஜ், தமிழ் கலைவாணன், கல்லூரி மாணவர் பிரசன்னா(20), மணிகண்டன்(39) ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு, திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 11 பேரும் ஆஜர்படுத்தப்பட்டு, குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை வரும் 27-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

வணிகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

8 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

2 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்