வட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை, திருவள்ளூர், காஞ்சியில் 25 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும்

சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் இன்று ஒரே நாளில் 25 செ.மீ.க்கு மேல் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், தேவையான முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத் தில் ஏராளமான இடங்களில் மழை பெய்துள்ளது.

இது தொடர்பாக அரசு நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியி ருப்பதாவது:

ஆந்திரா நோக்கி செல்கிறது

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில், சென்னைக்கு தென்கிழக்கே 125 கி.மீ. தொலைவில் வங்காள விரிகுடாவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் திரு வண்ணாமலை மாவட்டங்களில் மிக பலத்த மழையும் (அதாவது 25 செ.மீ.க்கும் அதிகமான மழை), கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் பலத்த மழையும் (அதாவது 12 செ.மீ.க்கும் அதிகமான மழை) பெய்ய வாய்ப்புள் ளது. மணிக்கு 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்பாக இருக்க வேண்டும்

பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப் படுகிறார்கள். தேவையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்கள் அறி வுறுத்தப்பட்டுள்ளனர். மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மழை அதிகம் பெய்யக்கூ டும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பார்வையிட அனுப் பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரவலாக பலத்த மழை

கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத் தில் ஏராளமான இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திரு வாரூர் மாவட்டம் நன்னிலத்தில் 140 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக் கத்தில் 120 மி.மீ., சீர்காழியில் 110 மி.மீ., கடலூர், மயிலாடுதுறை, குட வாசல் ஆகிய இடங்களில் தலா 100 மி.மீ., காரைக்கால், சமயபுரம், சிதம்ப ரம், காட்டுமன்னார்கோவில், அண்ணா பல்கலைக்கழகம், மதுக்கூர் ஆகிய இடங்களில் தலா 90 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வேதாரண்யம், நீடாமங்கலம், கொளப்பாக்கம், மன்னார்குடி, வலங்கை மான், திருத்துறைப்பூண்டி ஆகிய இடங் களில் தலா 80 மி.மீ., நெய்வேலி, சேத்தியாதோப்பு, ராமேசுவரம், கேளம்பாக்கம், சத்தியபாமா பல்கலைக்க ழகம், கந்தர்வக்கோட்டை, பெரும் புதூர், சென்னை விமான நிலையம், தோகமலை, பட்டுக்கோட்டை, முத்துப் பேட்டை, திருவிடைமருதூர், தரமணி, பேராவூரணி, புள்ளம்பாடி, ஆடுதுறை ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இதுதவிர தமி ழகம் முழுவதும் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் தலா 10 மி.மீ. முதல் 50 மி.மீ. வரை மழை பதிவாகியிருக் கிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

5 hours ago

மேலும்