கோயம்பேட்டில் அதிகாரிகள் திடீர் ஆய்வு: 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்

By செய்திப்பிரிவு

ஆம்னி பேருந்துகளில் கட்டணம் நிர்ணயிக்காத நிலையில் வழக்கத்தைவிட கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாக போக்குவரத்து ஆணையரகத்துக்கு தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இதன் அடிப்படையில் பொங்கல், தீபாவளி, ஆயுதபூஜை போன்ற பண்டிகை காலங்களில்தான் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆம்னி பேருந்துகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்துவார்கள்.

ஆனால், இந்தமுறை வட்டார போக்கு வரத்து அதிகாரி கே.பழனிசாமி மற்றும் வாகன ஆய்வாளர்கள் ஜெய்கணேஷ், ராஜாமணி, சரவணன், ஈஸ்வரன் ஆகியோர் கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் கடந்த 2 நாட்களாக திடீரென ஆம்னி பேருந்துகளில் ஆய்வுப் பணி மேற்கொண்டனர்.

இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அதிகாரி கே.பழனிசாமி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல், பாதுகாப்பு குறைபாடு உள்ளிட்டவற்றை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போக்குவரத்து ஆணையரின் உத்தரவின்பேரில் நாங்கள் ஆய்வு நடத்தினோம். இதில், தமிழக அரசுக்கு சாலை வரி செலுத்தாதது, பர்மிட் இல்லாமல் ஓட்டியது, தகுதிச்சான்று இன்றி ஓட்டியது உள்ளிட்ட விதிமீறல்களுடன் இயக்கப்பட்டு வந்த 4 ஆம்னி பேருந்துகளை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

உலகம்

11 hours ago

ஆன்மிகம்

11 hours ago

மேலும்