வரத்து குறைவால் பீன்ஸ், கேரட், முள்ளங்கி விலை உயர்வு: தக்காளி விலை ரூ.25 ஆக குறைந்தது

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பருவமழை பொய்த்த நிலையில், கடந்த பிப்ரவரியில் பல்வேறு காய்கறிகளின் விலை உயரத் தொடங்கின. கிலோ ரூ.10-க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.35 வரை உயர்ந்தது. இந்நிலையில் தற்போது தக்காளி, சாம்பார் வெங்காயம், வெண்டை, பாகற்காய், புடலை ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது. பீன்ஸ், கேரட், முள்ளங்கி ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி அங்காடி வியாபாரிகள் நலச் சங்க நிர்வாகி சுகுமாரிடம் கேட்டபோது, ‘‘பீன்ஸ், கேரட்டை பொறுத்தவரை, கர்நாட கத்திலிருந்து அதிக அளவில் வருகிறது. கர்நாடகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால், வரத்து குறைந்தது. அதனால் ரூ.35-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.40-க்கும், ரூ.15-க்கு விற்கப்பட்ட கேரட், ரூ.22-க்கும் விற்கப்படுகிறது. முள்ளங்கி விலை ரூ.8-லிருந்து ரூ.12 ஆக உயர்ந்துள்ளது.

தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் முருங் கைக்காய் வரத்து குறைந்து, அதன் விலை ரூ.13-லிருந்து ரூ.35 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை ரூ.25 ஆகவும், சாம்பார் வெங்காயம் ரூ.40-லிருந்து 30 ஆகவும், வெண் டைக்காய் ரூ.45-லிருந்து ரூ.30 ஆகவும், பாகற்காய் ரூ.35-லிருந்து ரூ.30 ஆகவும், குறைந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். மார்ச் 25-ம் தேதிக்குள் அனைத்து காய்கறிகளின் விலையும் உயரத் தொடங்கும்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்