பள்ளிக்கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர் வீரமணி ஆலோசனை

By செய்திப்பிரிவு

பள்ளிக்கல்வி துறையின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுடன் அமைச்சர் கே.சி.வீரமணி சென்னையில் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் ஆய்வுக் கூட்டம், சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக அரங்கில் நேற்று நடந்தது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை யில் நடந்த கூட்டத்துக்கு முதன்மைச் செயலர் டி.சபீதா முன்னிலை வகித்தார்.

இதில், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி கே.ராஜேந்திரன், அனைவருக்கும் கல்வி மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி மற்றும் பள்ளிக் கல்வித்துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆய்வின்போது, அரை யாண்டுத் தேர்வு நடத்துவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திரு வள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் கல்விச் சான் றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ்கள் நகல் கோரி பெறப்பட்ட விண் ணப்பங்கள், 10, 12-ம் வகுப்பு மாண வர்கள் பொதுத் தேர்வு எதிர்கொள் ளும் வகையில் அவர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி, உளவியல் ஆலோசனை, 2015-16ம் கல்வியாண்டில் விலையில்லா மிதிவண்டிகள் மற்றும் மடிக்கணினி வழங்கப் பட்ட விவரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும் 2015-16 கல்வி ஆண்டில் செயல்படுத்தப்பட வேண்டிய மாணவர்களின் நலத் திட்டம் தொடர்பாகவும் ஆலோ சனை செய்யப்பட்டது.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை உயர்த்த உரிய ஆலோசனைகளும் ஆசிரியர் களுக்கு பயிற்சி அளிப்பது தொடர்பாக அறிவுரைகளும் வழங்கப்பட்டன.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

13 mins ago

தமிழகம்

34 mins ago

இந்தியா

43 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்