தங்கம் விலை ரூ.304 உயர்ந்தது: ஒரு பவுன் ரூ.23,776

By செய்திப்பிரிவு

சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.304 உயர்ந்து ரூ.23,776-க்கு விற்கப்பட்டது.சர்வதேச அளவில் தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதிவரை தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் நிபுணர்கள்.

சர்வதேச அளவில் தங்கத்தில் முதலீடு அதிகரித்து வருவதால், உள்ளூரிலும் தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. சென்னையில் நேற்று முன்தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,934-க்கும், ஒரு பவுன் ரூ.23,472-க்கும் விற்கப்பட்டது. தங்கம் விலை நேற்று கிராமுக்கு ரூ.38 என பவுனுக்கு ரூ.304 உயர்ந்தது. இதனால், நேற்று ஒரு கிராம் ரூ.2,972-க்கும், ஒரு பவுன் ரூ.23,776-க்கும் விற்கப்பட்டது.

இதுதொடர்பாக சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச் செயலாளர் எஸ்.சாந்தகுமார் கூறியபோது, ‘‘தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருப்பதால், உலகம் முழுவதும் தங்கத்தில் அதிக அளவில் முதலீடு செய்கின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தில் முதலீடு 20 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூரில் தங்கம் விலை 5 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. தற்போது, ஆடி மாதமாக இருந்தபோதிலும் தேவை குறைவாகவே இருக்கிறது. இருப்பினும், சர்வதேச அளவில் தங்க முதலீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், தங்கம் விலை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஆகஸ்ட் மாத இறுதிவரை தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்