வெளிநாட்டு குளிர்பானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம்: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம்

By செய்திப்பிரிவு

வெளிநாட்டு குளிர்பானங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்படும் என்று மத்திய சென்னை மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங் களின் பேரமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இது தொடர்பாக பேரமைப்பின் மத்திய மாவட்ட செயலர் எஸ்.சாமு வேல் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அமைப்பின் மத்திய சென்னை மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென் னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்ர மராஜா கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப் பின் அறிவிப்பை ஏற்று மத்திய சென்னை மாவட்டத்தில் அனைத்து வணிகர்களும் வரும் மார்ச் 1-ம் தேதி முதல் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பது இல்லை எனவும், வெளிநாட்டு குளிர் பானங்களால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற் கொள்வது எனவும், உடல் நலனுக்கு நன்மை தரக்கூடிய உள்நாட்டு இயற்கை பானங்களான இளநீர், பதநீர், மோர், லஸ்ஸி, சர்பத், எலுமிச்சை சாறு, பழச் சாறு, கரும்புச்சாறு, புதினா நீர் ஆகியவற்றை அருந்தி, நாட்டு வளர்ச்சிக்கு துணை நிற்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

கூட்டத்தில் எக்ஸ்னோரா பி.நிர்மல், பேரமைப்பின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எம்.மாரித்தங்கம், பொருளாளர் வி.வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

12 mins ago

தமிழகம்

32 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

31 mins ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்