இரட்டை இலை சின்னத்தை பெற லஞ்சம் கொடுத்ததாக புகார்: தினகரன் நேரில் ஆஜராக காலக்கெடு இன்று முடிவு - மேலும் அவகாசமளிக்க டெல்லி போலீஸ் மறுப்பு

By செய்திப்பிரிவு

இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக எழுந்த புகாரில் டிடிவி தினகரன் டெல்லி போலீஸாரிடம் நேரில் ஆஜராவதற் கான காலக்கெடு இன்றோடு முடி கிறது. மேலும் 3 நாள் அவகாச மளிக்க அவர் விடுத்திருந்த கோரிக் கையை டெல்லி போலீஸார் ஏற்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

முன்னாள் முதல்வர் ஜெய லலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக இரண்டாக உடைந்தது. இதைத் தொடர்ந்து இரட்டை இலை சின் னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது.

இரட்டை இலை சின்னத்தை பெற அதிமுகவின் இரு அணியின ரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் சுகேஷ் சந்திர சேகர் என்ற பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.1 கோடியே 30 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், இரட்டை இலை சின்னத்தை பெற்றுத் தரவேண்டும் என்று கூறி டிடிவி தினகரன் தரப்பினர் தன்னிடம் ரூ.50 கோடி பேரம் பேசி முதல் கட்டமாக ரூ.1 கோடியே 30 லட்சம் கொடுத்ததாக சுகேஷ் கூறியதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சுகேஷ் அளித்த வாக்கு மூலத்தின் அடிப்படையில் தேர் தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு டெல்லி போலீஸார் சென்னை வந்தனர். பெசன்ட் நகரில் உள்ள டிடிவி. தினகரன் இல்லத்துக்கு சென்று சனிக்கிழமை (இன்று) டெல்லியில் நேரில் ஆஜராகும்படி கூறி சம்மன் வழங்கிச் சென்றனர்.

இந்த நிலையில், தனது உறவினர் காலமானதைத் தொடர்ந்து நேரில் ஆஜராக டிடிவி தினகரன் மேலும் 3 நாள் அவகாசம் கேட்டு இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், டெல்லி போலீஸார் அவகாசம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

நேரில் ஆஜராகலாமா? அல் லது தனது வழக்கறிஞர் மூலம் விளக்கம் அளிக்கலாமா? என்று டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

8 mins ago

ஜோதிடம்

27 mins ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

ஆன்மிகம்

9 hours ago

மேலும்