புரட்சியாளர்களில் தனித்துவமானவர் பகத்சிங்

By செய்திப்பிரிவு

மார்ச் - 23: பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கிலிடப்பட்ட நாள்

தேச விடுதலைக்காக உயிரைத் தியாகம் செய்தவர்கள் ஏராளம். இவர்களில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் தியாகம், தியாகி களின் வரிசையில் மட்டும் பேசப் படுவதோடு நில்லாமல், அதையும் தாண்டி நிலைத்து நிற்கிறது.

பகத்சிங் நேரடியாக களத்தில் நின்று ஆயுதம் ஏந்தி போராடிய சம்பவங்கள் இரண்டு. ஒன்று லாலா லஜபதி ராயின் மரணத்துக்கு காரணமான சாண்டர்சன் கொலை. மற்றொன்று நாடாளுமன்றத்தில் காலியான இருக்கைகள் மீது குண்டு வீசப்பட்ட சம்பவம்.

1928 டிசம்பர் 17 அன்று சாண்டர்சன் கொலை சம்பவத்தின் போது, பகத்சிங் சார்ந்திருந்த இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடி யரசு சங்கத்தின் சார்பில் அச்சடிக்க பட்ட சுவரொட்டியில், “ஒரு மனி தனைக் கொல்வதற்கு நாங்கள் வருத்தமடைகிறோம். ஆனால் இந்த மனிதன் கொடுங் கோன்மையின் ஓர் அங்கமாக இருந்தான். எனவே இந்த மனி தனைக் கொல்வது அவசியமாக இருந்தது. நாங்கள் மனித உயிரை மிகவும் நேசிக்கிறோம். மனிதன் அமைதியையும் முழு சுதந்திரத் தையும் பெற வேண்டும் என நாங்கள் கனவு காண்கிறோம்” என குறிப்பிட்டிருந்தனர்.

இதற்கடுத்து, தொழிற்சங்கங் களின் உரிமைகளை ஒடுக்கும் ‘தொழில் தாவா சட்ட முன்வடிவு’ 1929 ஏப்ரல் 8-ல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை எதிர்க்கும் வகையிலேயே அன்று நாடாளுமன்றத்தில் பகத்சிங்கும், பட்கேஸ்வர் தத்தும் குண்டு வீசிவிட்டு, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி வெல்லட்டும்) என்று முழக்கமிட்டனர்.

குண்டு தயாரிக்கும்போதே உயிர்ச் சேதம் ஏற்படுத்தாத வகையில்தான் தயாரித்தனர். காலி இருக்கைகளை நோக்கியே அந்தக் குண்டும் வீசப்பட்டது. குண்டை வீசிவிட்டு தப்பி ஓடக் கூடாது, கைதாகி மக்களிடம் கருத்துகளைப் பரப்பும் மேடை யாக நீதிமன்ற விசாரணையை மாற்ற வேண்டும் என்று முன்பே தங்கள் கூட்டத்தில் முடிவெடுத் திருந்தனர். அதுபோலவே அவர்கள் இருவரும் கைதாகினர்.

அவர்கள் நினைத்தது போலவே அவர்களின் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவியது.

நீதிமன்றத்தில் அவர்களின் வாதங்கள் பரபரப்பை ஏற்படுத்தி யது. மக்கள் மத்தியில் இவர்களின் வாதங்கள் விரிந்த கவனத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், 3 நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு தீர்ப்பாயத்தை அமைத்து விசாரித்தது.

சிறையில் பகத்சிங் இருந்த 2 ஆண்டுகளில் 56 நூல்களை வாசித்து, சுமார் 404 பக்கங்களுக்கு குறிப்புகள் எடுத்துள்ளார். பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு சுமார் 45 நாட்களுக்கு முன்பு இளம் அரசியல் ஊழியர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தார். அதில், “நான் ஒரு பயங்கரவாதியல்ல. நான் ஒரு புரட்சியாளன். நீண்ட திட்டத்தை, தீர்மானகரமான சிந்தனைகளைப் பெற்றிருக்கும் ஒரு புரட்சியாளன். எனது புரட்சிகர வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைத் தவிர நான் ஒருபோதும் பயங்கர வாதியாக இருந்ததில்லை” என்று பிரகடனம் செய்தார்.

‘இந்தப் போராட்டம் எங்களால் தொடங்கப்படவுமில்லை, எங்க ளோடு முடியப்போவதும் இல்லை. மனிதனை, மனிதன் சுரண்டும் சமுக அமைப்பு மாறும் வரை இப் போராட்டம் தொடரும்’ என்பதே அவர்களின் போராட்ட பார்வை.

சிறையில் இருக்கும்போது பஞ்சாப் மாணவர்கள் மாநாட்டுக்கு பகத்சிங் எழுதிய வாழ்த்துச் செய்தி யில், “தோழர்களே, இன்று துப்பாக்கிகளையும், வெடிகுண்டு களையும் கையில் எடுக்குமாறு இளைஞர்களாகிய உங்களை நாங்கள் கோரப் போவதில்லை. இளைஞர்கள், தொழில்மயமான பகுதிகளின் சேரிகளிலும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசை களிலும் வாழ்ந்து கொண்டிருக் கும் கோடிக்கணக்கானவர்களை விழிப்படைய செய்ய வேண்டும்” என்றே அறைகூவல் விடுத்தார்.

விடுதலைப் பெற்று 70 ஆண்டு களுக்கு பிறகும் சேரிகளும், கிராமப் புறங்களின் ஓட்டைக் குடிசைகளும், ஒடுக்கப்படும் மக்களும் இன்றும் இருக்கவே செய்கிறார்கள். அவர் களை விழிப்படைய செய்ய வேண் டிய கடமை இந்திய இளைஞர் களுக்கு இருக்கவே செய்கிறது.

பகத்சிங் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, அவர் வாசித்த புத்தகத்தின் பக்கங்களில் இருந்து நம் பயணத்தை நாம் தொடர வேண்டி யுள்ளது.

கட்டுரையாளர்: ச.லெனின்

சமூக செயற்பாட்டாளர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்