12 நாள் வேலைநிறுத்தத்தை தொடர்ந்து விசைத்தறி உரிமையாளர்கள் உண்ணாவிரதம்: ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு

By செய்திப்பிரிவு

ஒப்பந்தப்படி கூலி கேட்டு போராடி வரும் கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி உரிமையாளர்கள், கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று 10 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் கள் ஜவுளி உற்பத்தியாளர்களிடம் பாவு நூலைப் பெற்று கூலி அடிப்படையில், அதனை காடா துணியாக நெசவு செய்து கொடுத்து வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்தத்தின் படி ஜவுளி உற்பத்தி யாளர்கள் கூலி வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், இதுவரை ஜவுளி உற்பத்தியாளர்கள் பிடித்தம் செய்த கூலித் தொகையை வழங்க வலியுறுத்தியும், விசைத் தறி உரிமையாளர்கள் போராடி வருகின்றனர். கடந்த 2-ம் தேதி இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கியது.

3 லட்சம் தொழிலாளர்கள்

கோவை, திருப்பூர் மாவட்டங் களில் 12-வது நாளாக நடை பெற்று வரும் இந்த வேலைநிறுத் தம் காரணமாக, 1.25 லட்சம் விசைத்தறிகள் இயக்கம் நிறுத்தப் பட்டன. இதனால் நாளொன்றுக்கு சுமார் 75 லட்சம் மீட்டர் துணி உற்பத்தி பாதிக்கப்பட்டு, ரூ.22 கோடி உற்பத்தி இழப்பும் ஏற்பட்ட தாகவும், 12 நாள் வேலை நிறுத்தத்தில் ஒட்டுமொத்தமாக ரூ.250 கோடி வரை உற்பத்தி இழப்பு ஏற்பட்டதோடு, 3 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் விசைத் தறி உரிமையாளர்கள் தெரிவித் திருந்தனர்.

எனவே, கோவை, திருப்பூர் மாவட்ட நிர்வாகங்கள் பேச்சு வார்த்தை நடத்தி ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து உரிய கூலியை பெற்றுத்தர வேண்டும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், இரு மாவட்ட நிர்வாகங்களும் தங்களது கூலி பிரச்சினையில் தீர்வு காண முன் வரவில்லை எனக் கூறி விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் 8 இடங் களிலும் திருப்பூரில் 2 இடங்களிலும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒவ்வொரு இடத்திலும் நூற்றுக்கணக்கான விசைத்தறி உரிமையாளர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர்.

ஒப்பந்தப்படி கூலி கேட்டு நடக்கும் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர இரு மாவட்ட நிர் வாகங்களும் விரைந்து நட வடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக் கப்படும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

தமிழகம்

24 mins ago

இந்தியா

48 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

58 mins ago

விளையாட்டு

50 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

5 hours ago

மேலும்