ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: 8 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு - மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தலை கண்காணிக்க 8 குழுக்கள் அமைக் கப்பட்டிருப்பதாக மாவட்ட தேர்தல் அலுவலர் அறிவித்துள் ளார்.

சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை மாவட்டத்தில் உள்ள ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள் ளது. ஆர்.கே.நகரில் தேர்தல் நன்னடத்தை விதிகள் முழுமை யாக அமலில் உள்ளன. தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் அரசியல் கட்சி யினரோ அல்லது பொதுமக்களோ சுவர் விளம்பரங்கள் செய்யக் கூடாது. சுவரொட்டிகள் ஏதும் ஒட்ட வேண்டாம். அவ்வாறு ஏதேனும் இருப்பின் அவற்றை உடனடியாக அகற்றிவிட வேண்டும்.

அனுமதியின்றி வைக்கப் பட்டுள்ள விளம்பரங்களை சம்பந் தப்பட்ட நபர்கள் அகற்றவில்லை என்றால், அவை மாநகராட்சி ஊழியர்களால் அகற்றப்படும். விதிமீறலில் ஈடுபட்ட நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின்படி குற்றவியல் நடவடிக்கை மேற் கொள்ளப்படும்.

வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களை கண்காணிக்க 3 பறக்கும் படைகளும், 3 நிலையான கண்காணிப்பு குழுக்களும், 2 வீடியோ கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட் பாளர்களுக்கான வாகன அனுமதி, பிரச்சாரம் மற்றும் தேர்தல் அலுவலகத்துக்கான அனுமதியை ஒற்றைச்சாளர முறையில் சென்னை மாநகராட்சி 4-வது மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ள லாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

19 mins ago

சினிமா

37 mins ago

வாழ்வியல்

19 mins ago

தமிழகம்

55 mins ago

க்ரைம்

1 hour ago

வணிகம்

1 hour ago

சினிமா

1 hour ago

கருத்துப் பேழை

2 hours ago

உலகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்