கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா: 85 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்தது

By செய்திப்பிரிவு

கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் 85 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயிலில் கடந்த 1932-ம் கும்பாபிஷேகம் நடந்தது. 85 ஆண்டுகளுக்கு பிறகு இக் கோயிலில் திருப்பணிகள் மேற் கொள்ளப்பட்டு நேற்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி, உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேசம் கங்கை நதியில் இருந்து 108 குடங்களில் புனித நீர் எடுத்து வரப்பட்டு, இக்கோயிலின் குறிப்புகள் கொண்ட, தஞ்சை மாவட்டம் திருலோகி எனும் இடத்தில் வைக்கப்பட்டு, அங்கிருந்து கடந்த 27-ம் தேதி ஊர்வலமாக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது

அதன்பிறகு, கடந்த ஜனவரி 29-ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து, 8 கால யாகசாலை பூஜைகள் நடைபெற் றன. இதில், 85 சிவாச்சாரியர்கள், 20 வேதவிற்பன்னர்கள் பங்கேற்று வேதங்களையும், பன்னிரு திரு முறைகளையும் பாடி யாக பூஜைகள் செய்தனர்.

நேற்று காலை 8.30 மணிக்கு கோபூஜைக்குப் பிறகு, மேள தாளங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்களை கோயிலை சுற்றி எடுத்து வந்தனர். தொடர்ந்து, 9.30 மணியளவில் மூலவர் மற்றும் துர்க்கையம்மன், பிரகன்நாயகி சன்னதிகளின் கோபுர கலசங்களுக்கு சிவாச்சாரி யார்கள் புனித நீர் ஊற்றி கும்பா பிஷேகம் செய்தனர். தொடர்ந்து மாலை 4 மணிக்கு மகாபிஷேகம், 5 மணிக்கு திருக்கல்யாணம், 6 மணிக்கு சுவாமி வீதியுலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

பல்லாயிரக்கணக்கான பக்தர் கள் இதில் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை, காஞ்சி காமகோடி மடத்தினர், கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழுமம் மற்றும் இந்து சமய அறநிலையத் துறையினர் செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

46 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்