புரட்டாசி ஆரம்பம்: முட்டை விலை சரிவு

By செய்திப்பிரிவு

புரட்டாசி மாதம் தொடக்கம் காரணமாக முட்டை விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது என தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் தெரிவித்துள்ளார். நாமக்கல் மண்டலத்தில் 800-க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்தப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் சத்துணவு திட்டம், கேரள மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் அனுப்பப்படுகின்றன. தமிழகம் முழுவதும் விற்பனைக்கும் அனுப்பப்படுகின்றன.

நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. வழக்கமாக மழைக்காலங்களில் முட்டை நுகர்வு அதிகமாக இருக்கும். இதை மையப்படுத்தி விலை உயர்வது வழக்கம். கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதுகுறித்து தமிழ் நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்க தலைவர் ஏ.கே.பி.சின்ராஜ் கூறும் போது, "புரட்டாசி மாதத்தில் இறைச்சி நுகர்வு குறைவாக இருக்கும். இதுவே முட்டை விலை சரிவுக்கான காரணமாகும்" என்றார். நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை விலையில் 5 காசுகள் குறைத்து, 340 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (காசுகளில்): சென்னை 375, பெங்களூரு 368, மைசூரு 366, ஹைதராபாத் 338, மும்பை 401, விஜயவாடா 376, கொல்கத்தா 427, பர்வாலா 356, டில்லி 383, ஹோஸ்பெட் 333 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 mins ago

க்ரைம்

25 mins ago

இந்தியா

35 mins ago

விளையாட்டு

24 mins ago

இந்தியா

40 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

தொழில்நுட்பம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்