தேர்வு விடைத்தாள் மறுகூட்டல் மோசடி விவகாரம்; அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் அதிகாரி உமாவுக்கு சம்மன்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை தீவிரம்

By செய்திப்பிரிவு

அண்ணா பல்கலைக்கழக தேர்வு விடைத்தாள் மறுகூட்டலில் லஞ்சம் வாங்கியதாக தொடரப்பட்ட வழக் கில் முன்னாள் தேர்வுக் கட்டுப் பாட்டு அதிகாரி ஜி.வி.உமாவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழுள்ள பொறியியல் கல்லூரிகளில் 2017 ஏப்ரல், மே மாதங்களில் செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. 12 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், குறைந்த மதிப்பெண் மற்றும் தோல்வி அடைந்த 3 லட்சத்து 2,380 மாணவர்கள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பித் திருந்தனர். அதில் 73,733 மாணவர் கள் தேர்ச்சி பெற்றதோடு, 16,636 மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்றனர்.

இந்நிலையில், மறுகூட்டலில் அதிக மதிப்பெண் போடுவதற்கு லஞ்சம் வாங்கியதாக கொடுக் கப்பட்ட புகாரின்பேரில், அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப் பாட்டு அலுவலராக இருந்த ஜி.வி.உமா, பேராசிரியர்கள் விஜயகுமார், சிவக்குமார், சுந்தரராஜன், மகேஷ் பாபு, அன்புசெல்வன், பிரதீபா, பிரகதீஸ் வரர், ரமேஷ் கண்ணன், ரமேஷ் ஆகிய 10 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக் குப்பதிவு செய்தனர். லஞ்சம் வாங்குதல், கூட்டுச்சதி, மோசடி உட்பட 8 பிரிவுகளின் கீழ் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

10 பேர் பணியிடை நீக்கம்

இந்த மோசடி தொடர்பாக துறை ரீதியாக விசாரணை நடத்த குழு அமைத்திருப்பதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சுரப்பா தெரிவித்துள்ளார். மேலும், வழக்குப்பதிவு செய்யப்பட்ட 10 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு தலைமை அலுவலகத்தில் ஆஜராகும்படி பேராசிரியர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவகுமார் ஆகியோருக்கு லஞ்ச ஒழிப்பு போலீஸார் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இதில், மேலும் பல உண்மைகள் தெரியவந்தன. அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் என மேலும் பலருக்கும் இந்த மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

விரைவில் விசாரணை

இந்த வழக்கில் எப்ஐஆரில் முதல் நபராக குற்றம் சாட்டப் பட்டிருக்கும் முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியான உமாவிடம் இதுவரை லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் நேரடியாக விசாரணை நடத்தவில்லை.

இந்நிலையில் உமாவை நேரில் ஆஜராகச்சொல்லி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

விரைவில் அவரிடம் நேரில் விசாரணை நடத்த இருக்கிறோம் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

58 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்