கோவையில் ஜி.ராமகிருஷ்ணன் கைது

By செய்திப்பிரிவு

 

கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.

கோவை மாநகரின் குடிநீர் விநியோகம் மற்றும் பராமரிப்புப் பணியை, பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளதைக் கண்டித்து கோவை மாநகராட்சி மண்டல அலுவலகங்களை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறும்போது, “வியாபார நோக்கில் குடிநீர் விநியோகத்தை தனியாரிடம் தாரை வார்த்துள்ளது கோவை மாநகராட்சி. இதனால் பொதுக் குழாய்கள் மூடப்படுவதுடன், குடிநீர் இணைப்புக் கட்டணமும் பல மடங்கு அதிகரிக்கும். எனவே, மக்களுக்கு விரோதமான ஒப்பந்தத்தை ரத்து செய்யும்வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன் உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்தனர். இதையொட்டி, சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதேபோல, கோவையின் ஐந்து மண்டல அலுவலகங்களையும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சிஐடியு தொழிற்சங்கம், ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்பினரும் கைது செய்யப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

16 mins ago

வணிகம்

31 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

55 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்