அண்ணா பதக்கம் பெறும் 100 போலீஸார் பெயர் பட்டியல் வெளியீடு

By செய்திப்பிரிவு

‘முதலமைச்சரின் அண்ணா பதக்கம்’ பெறவுள்ள 100 போலீஸாரின் பெயர்களை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

தமிழ் நாட்டில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறை, சிறைத்துறை, ஊர்க்காவல் படை மற்றும் தமிழ்நாடு விரல்ரேகைப் பிரிவு அலுவலர்கள் சிறப்பாக பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையிலும், பணியில் ஈடுபாடு மற்றும் அர்ப்பணிப்புடன் பணிபுரிந்ததை பாராட்டும் வகையிலும், ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் 15-ம் தேதி அண்ணா பிறந்த நாளன்று முதல்-அமைச்சரின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டும், வழங்கப்பட்டும் வருகின்றன.

இந்த ஆண்டு, காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் முதல், முதல்நிலை காவலர் வரையிலான 100 பேருக்கும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையில் மாவட்ட அலுவலர் முதல் தீயணைப்பு வீரர் வரையிலான 10 பேருக்கும், சிறைத்துறையில் துணை சிறை அலுவலர் முதல் முதல்நிலை சிறைக்காவலர் வரையிலான 10 பேருக்கும், ஊர்க்காவல் படையில் மண்டல தளபதி முதல் பிரிவுத் தலைவர் வரையிலான 5 பேருக்கும், விரல்ரேகைப் பிரிவில் 2 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தடய அறிவியல் துறையில் துணை இயக்குநர் ஒருவருக்கும் என மொத்தம் 128 பேருக்கு, அவர்களின் மெச்சத்தகுந்த பணியை அங்கீகரிக்கும் வகையில் ‘முதலமைச்சரின் அண்ணா பதக்கங்கள்’ வழங்கப்படுகின்றன.

இந்த ஆண்டு பதக்கம் பெறும் போலீஸாரின் பட்டியலில் எஸ்பிக்கள் பி.சரவணன், பி.கண்ணம்மாள், எஸ்.மணி, எஸ்.விமலா, காவல் ஆய்வாளர்கள், கிளாட்சன் ஜோஸ், கவுசல்யா, கிரிஜா உட்பட 100 பேரின் பெயர் பட்டியலை தமிழக அரசு நேற்று வெளியிட்டது.

பதக்கம் வழங்கப்படும் நாள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

30 mins ago

இந்தியா

1 hour ago

வணிகம்

9 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

கல்வி

1 hour ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்