ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற 3 வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம்; 2 வீரர்களுக்கு தலா ரூ.20 லட்சம் அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

By செய்திப்பிரிவு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீராங் கனைகளுக்கு முதல்வர் கே.பழனி சாமி வாழ்த்து தெரிவித்து அவர் களுக்கு தலா ரூ.30 லட்சம் உயர் ஊக்கத்தொகை அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது:

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்கள் ஸ்குவாஷ் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீபிகா பல்லிக்கல் கார்த்திக், ஜோஷ்னா சின்னப்பா, சுனாய்னா குருவில்லா ஆகிய மூன்று விளையாட்டு வீராங்கனைகளுக்கு தலா ரூ.30 லட்சம் உயர் ஊக்கத்தொகை அறிவித்து ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து கடிதங்களை முதல்வர் பழனிசாமி அனுப்பியுள் ளார்.

இதுதொடர்பாக அவர்களுக்கு தனித்தனியே அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதத்தில், ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண் கள் ஸ்குவாஷ் பிரிவில் தாங்கள் வெள்ளிப்பதக்கம் வென்றதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடை கிறேன். இந்த சாதனைக்காக எனது மனம்கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சர்வ தேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்களை ஊக்கப்படும் வகையில் அவர்களுக்கு உயர் ஊக்கத்தொகையாக ரூ.30 லட்சம் வழங்கப்படும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி, உயர் ஊக்கத்தொகை ரு.30 லட்சம் பெறும் தகுதியை நீங்கள் பெறு கிறீர்கள். தங்களையும் சாதனை புரிய துணைநின்றவர்களையும் எனது சார்பாகவும் தமிழக மக்கள் சார்பாகவும் மீண்டும் வாழ்த்துகி றேன். தாங்கள் மென்மெலும் பல வெற்றிகள் பெற வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ரூ.20 லட்சம் ஊக்கத் தொகை

மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜேஷ், ரூபிந்தர் பால் சிங் ஆகிய இருவருக்கும் தலா ரூ.20 லட்சம் உயர் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் முதல்வர் கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

14 mins ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்