கல்பாக்கம் அருகே 15 பேருக்கு திடீர் காய்ச்சல்: மருத்துவக் குழுவினர் முகாம்

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கம் அருகே ஒரே கிராமத்தைச் சேர்ந்த 15 பேர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து சைதாப்பேட்டை சுகாதார மாவட்ட துணை இயக்கு நர் ராஜசேகர் கூறியதாவது: ‘கல்பாக்கம் அடுத்த நல்லூர் கிராமத்தில் சிலருக்கு 2 நாட்களுக்கும் மேலாக காய்ச்சல் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து அங்கு மருத்து வர் குழு சனிக்கிழமை அனுப்பப்பட்டு கிராமம் முழுவதும் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 13 பேருக்கு காய்ச்சல் இருந் தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் களை 108 ஆம்புலன்ஸ் மூல மாக செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகிறோம்.

ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டு அவர்களும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களின் ரத்த மாதிரி எடுத்து ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. இதில் யாருக் கும் டெங்கு காய்ச்சல் இல்லை என்பதும், இவர்களுக்கு வந்தது வெறும் வைரஸ் காய்ச்சல் என் பதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து அப்பகுதி யில் குடிநீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு, குளோரின் கலந்த குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் கொசுக்களை ஒழிக்க புகை மருந்து அடிக்கப் பட்டு வருகிறது. எங்கள் மருத்துவக் குழுவினர் தொடர்ந்து அந்த கிராமத்தில் தங்கி தீவிர கண்காணிப்பில் ஈடு பட்டு வருகின்றனர்’ என்று அவர் தெரிவித்தார்.

மருத்துவர் குழு சனிக்கிழமை அனுப்பப்பட்டு கிராமம் முழுவதும் ஆய்வு நடத்தியது. இதில் 13 பேருக்கு காய்ச்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

உலகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்