தற்கொலை எண்ணத்தை தடுக்க வேண்டும்: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிவுரை

By செய்திப்பிரிவு

சென்னை மயிலாப்பூரில் தற் கொலை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று காலை நடை பெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பேசியதாவது:

உலகத்தில் நடைபெறும் தற் கொலைகளில் 17 சதவீத தற்கொலைகள் இந்தியாவில் நடைபெறுகின்றன. இந்தியாவில் புதுச்சேரி, தமிழகம், கேரளாவில் மிக அதிக அளவில் தற்கொலைகள் நிகழ்கின்றன. சுமார் 30 முதல் 35 சதவீத தற்கொலைகள் இந்த 3 மாநிலங்களில் நடைபெறுகின்றன. 17 முதல் 30 வயதுக்குள் இருப் பவர்கள் அதிக அளவில் தற் கொலை செய்து கொள்கின்றனர். தற்கொலைகளை தடுக்க காவல் துறை சார்பில் கவுன்சலிங் அளித்து வருகிறோம். உடல்நலத்தைப் பேணுவதுபோல, மனநலத்தையும் அனைவரும் பேண வேண்டும். தற் கொலைகளை தடுக்கும் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

8 mins ago

க்ரைம்

52 mins ago

தமிழகம்

42 mins ago

இந்தியா

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்