அறக்கட்டளைக் கூட்டங்களுக்கு தயாராகும் எம்.ஏ.எம்.ராமசாமி: முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தகவல்

By குள.சண்முகசுந்தரம்

தொழிலதிபர் எம்.ஏ.எம்.ராமசாமி யின் புகாரை அடுத்து சென்னையி லுள்ள அவரது செட்டிநாடு அரண்மனையில் இருந்த கண்காணிப்புக் கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.

எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் அவரது வளப்பு மகன் ஐயப்பன் என்கிற முத்தையாவுக்கும் இடையில் ஏற்பட்ட மனக் கசப்புகளை அடுத்து சென்னையிலுள்ள செட்டிநாட்டு அரண்மனையில் சில அதிரடி மாற்றங்கள் செயப்பட்டன. அதன் ஒரு பகுதியாக அரண்மனையில் முக்கியப் பகுதிகளில் கண்காணிப் புக் கேமராக்கள் பொருத்தப்பட் டன. இதையடுத்து, தன்னை தனிமைப்படுத்த முயற்சிப்பதாக வும் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் போலீஸில் புகார் கொடுத்தார் எம்.ஏ.எம்.ராமசாமி. இதுதொடர்பாக போலீஸ் விசாரித்த போது, அப்பாவின் பாதுகாப்பு கருதியே கண்காணிப்புக் கேமராக் களை பொருத்தியதாக தெரிவித்தார் வளர்ப்பு மகன் முத்தையா.

இந்த நிலையில் செட்டிநாடு குழும இயக்குநர் மற்றும் தலைவர் பதவியிலியிருந்து தன்னை நீக்காமல் இருப்பதற்காக கம்பெனிகளுக்கான பதிவாளர் மனுநீதிச் சோழனுக்கு எம்.ஏ.எம்.ராமசாமி 10 லட்ச ரூபாய் பணம் கொடுத்ததாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., இதுதொடர்பாக மனுநீதி சோழனை கைது செய்தது. அவரிடம் நடத்தப்பட்ட தொடர் விசா ரணயில் சில முக்கிய தகவல்கள் கிடைத்திருப்பதாகத் தெரிகிறது.

இதுகுறித்து ’தி இந்து’விடம் பேசிய அரண்மனை வட்டத்துக்கு நெருக்கமானவர்கள் கூறியதாவது: மனுநீதிச் சோழனிடமிருந்து கைப் பற்றப்பட்ட பணத்தை யார் வைத் தது என்ற விஷயமெல்லாம் கண் காணிப்புக் கேமராவில் பதிவாகி விட்டது. இதன் பின்னணியில் இருக்கும் சதியும் அம்பலத்துக்கு வந்துவிட்டது.

எனவே இந்த விஷயத்தில் எம்.ஏ.எம்-முக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பது தெளிவாகி விட்டது. இதையடுத்தே கண்காணிப்புக் கேமராக்கள் அப்புறப்படுத்தப்பட் டுள்ளன. மனுநீதிச் சோழனுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டால் இன்னும் பல புதிர்களுக்கு விடை கிடைத்துவிடும். வளர்ப்பு மகன் முத்தையா சிங்கப்பூர் குடியுரிமை பெறும் முயற்சியில் தீவிரமாக இருப்பதால் அவர் தன் மீது வழக்கு கள் ஏதும் வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே, தற்போது உடல் நலம் தேறியுள்ள எம்.ஏ.எம்.ராம சாமி, அரண்மனை விவகாரங்களில் தனது பிடிமானத்தை ஸ்திரப்படுத்து வதற்காக 22-ம் தேதியிலிருந்து அறக்கட்டளைக் கூட்டங்களில் கலந்துகொண்டு சில அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாகக் கூறுகின்றனர்.

இதுபற்றி கூறியவர்கள், “ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஐயப்பன் கோயில் அறக்கட்டளைத் தலைவராக எம்.ஏ.எம். இருக்கிறார். இந்தக் கோயில் சம்பந்தப்பட்ட நகைகள் உள்ளிட்டவை முத்தை யாவின் பொறுப்பில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், 22-ம் தேதி அறக்கட்டளையின் நிர்வாகக் குழுக் கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார் எம்.ஏ.எம். இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனத் தெரிகிறது.

25-ம் தேதி, எம்.ஏ.எம்.-மின் அண்ணி குமாரராணி மீனா முத்தையாவின் 81-வது பிறந்த நாள் விழா ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நடக்கிறது. 30-ம் தேதி, ராஜா சர் அண்ணாமலைச் செட்டியாரின் (எம்.ஏ.எம்-மின் ஐயா) பிறந்த நாள் விழா ராணி சீதை ஹாலில் நடக்கிறது. ஏற்கெனவே அண்ணனின் பிறந்த நாள் நினைவு பரிசளிப்பு விழாவை புறக்கணித்த எம்.ஏ.எம். இந்த இரண்டு விழாக்களிலும் கட்டாயம் கலந்து கொள்வார் என்று தெரிகிறது.

இந்த விழாக்களுக்கு முத்தையா வந்தால் அவருக்கு எதிர்ப்புக் காட்டவும் ஒரு குழு தயாராகிக் கொண்டிருக்கிறது. இதுமாத்திரமில்லாமல், 27 அல்லது 29-ம் தேதி மதுரையிலுள்ள தமிழ் இசைச் சங்க அறக்கட்டளை கூட்டம் நடக்கிறது. இதன் தலைவராக எம்.ஏ.எம்.-தான் இருக்கிறார். இதன் செயலாளராக வளர்ப்பு மகன் முத்தையாவை பெற்ற தந்தையான சேக்கப்பச் செட்டியார் இருக்கிறார். அவரது பதவி காலம் முடிவுறும் நிலையில் இருப்பதால் அன்றைய கூட்டத்தில் சேக்கப்பச் செட்டியாருக்குப் பதிலாக புதிய செயலாளர் தேர்வு செய்யப்படவும் வாய்ப்பு இருக்கிறது’’ என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

17 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

28 mins ago

வாழ்வியல்

19 mins ago

இந்தியா

33 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்