பருவமழை தொடங்கும் முன்மழைநீர் கால்வாய் பணியை முடிக்க வேண்டும்: ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுரை

By செய்திப்பிரிவு



தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமை யில், கடந்த 14-ம் தேதி சென்னை மாநகரில் வெள்ளத்தடுப்பு, முன் னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில், கடந்த 2017-ல் நிய மிக்கப்பட்ட அதிகாரிகளின் பரிந் துரைப்படி சென்னை மாநகர் முழுவதும் வெள்ள மற்றும் மழைநீர் தடுப்பு வடிகால்கள் பணி களை விரைவாக முடிக்க அறி வுறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால் மற்றும் வெள்ளத்தடுப்பு பணி களுக்காக ரூ.290 கோடி ஒதுக் கப்பட்டதில், சென்னை மாநகரில் 117 கிமீ நீளத்துக்கு விடுபட்ட மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்வதற்கான பணி களுக்கு கடந்த செப்.24-ம் தேதி பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இப்பணிகள் நேற்று தொடங்கின.

இந்நிலையில் நேற்று, சென்னை யில் மழைநீர் கால்வாய்களில் விடுபட்ட பணிகளை மேற்கொள் வதற்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் மாநகராட்சி துணை ஆணையாளர் எம்.கோவிந்தராவ் தலைமையில் நடந்தது.

இக்கூட்டத்தில், மழைநீர் வடிகால் பணிக்காக பள்ளம் தோண்டும்போது குடியிருப்பு அல்லது வணிக வளாகங்களுக்கு பொதுமக்கள் செல்ல ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய தற்காலிக நடைபாதை அமைக்க வேண்டும். பழைய மழைநீர் வடிகாலை உடைத்து தூர்வாரும் பணிகளை செய்யும் போது, பணியாளர் களுக்கு பாதுகாப்பு கவசம் வழங் கப்பட வேண்டும் என்று ஒப்பந்த தாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மழைநீர் வடிகால் பணியின் போது எடுக்கப்படும் மண்ணை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். மழைநீர் வடிகாலில் கழிவுநீர் இணைப்பு கொடுத்திருந் தால் அதை துண்டித்து கழிவுநீர் குழாயுடன் இணைக்க வேண்டும். ஒப்பந்த நடைமுறைகளை பின் பற்ற வேண்டும். இல்லாவிட்டால் ஒப்பந்தப்பணிகள் நிறுத்தப்படும். வடகிழக்கு பருவமழைக்கு முன் போர்க்கால அடிப்படையில் பணிகளை முடிக்க வேண்டும் என்றும் ஒப்பந்ததார்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

இந்தியா

16 mins ago

கருத்துப் பேழை

9 mins ago

கருத்துப் பேழை

17 mins ago

சினிமா

2 hours ago

கல்வி

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

5 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்