நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது; தொடர்ந்து செயல்படும்: அமைச்சர் காமராஜ்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது, தொடர்ந்து செயல்படும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மூட மத்திய அரசு ஆணை பிறப்பித்திருப்பதாகவும், அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.

இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் உள்ளிட்டோர் அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தமிழகத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படாது, தொடர்ந்து செயல்படும் என்றும், பராமரிப்புப் பணிக்காக ஒரு சில நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டன என்றும் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் காமராஜ் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழ்நாடு விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்று விவசாயிகள் விளைவித்த நெல்லை அரசே கொள்முதல் செய்வதற்கு ஏதுவாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்பட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தங்கு தடையில்லாமல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு தகுந்த அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளது'' என்று தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

42 mins ago

வணிகம்

57 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்