சென்னை உட்பட 13 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு 

By செய்திப்பிரிவு

சென்னை உட்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்ப தாவது:

வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், நாகப்பட்டினம், திருவாரூர், திருவண்ணாமலை ஆகிய 12 மாவட்டங் களிலும், காரைக்காலிலும் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 82 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் 70 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வேலூர் மாவட்டம் கலவையில் 50 மிமீ, செங்கம், உளுந்தூர்பேட்டை, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தலா 40 மிமீ, போளூர், பூந்தமல்லி, அண்ணா பல்கலைக்கழகம், மயிலம், செம்பரம்பாக்கம், கடலூர், குளப்பாக்கம், மேட்டூர் ஆகிய இடங்களில் தலா 20 மிமீ, குன்னூர், கிருஷ்ணகிரி, வால்பாறை உட்பட 14 இடங்களில் தலா 10 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நேற்று அதிகபட்சமாக திருச்சி, மதுரை விமான நிலையம் ஆகிய இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இதுதவிர, கரூர் பரமத்தியில் 101, மதுரை தெற்கில் 102, தஞ்சாவூரில் 102, தூத்துக்குடியில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

20 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

57 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

மேலும்