மதுரையில் பல்கலைக்கழக பேராசிரியர் வீட்டில் வைரக் கற்கள் கொள்ளை: தங்கம், வெள்ளி, எலக்ட்ரானிக்ஸ் பொருட்களும் திருட்டு

By என்.சன்னாசி

மதுரையில் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் வேலை செய்யும் பேராசிரியரின் வீட்டில் வைரம், தங்கம், வெள்ளி நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன.

ராமநாதபுரத்தைச் சேர்ந்தவர் கவுதம். இவருக்கு மதுரை அருகிலுள்ள டெஸ்கோஸ் சிட்டியில் சொந்த வீடு உள்ளது. இவர், சவுதியிலுள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் மருந்துகள் துறை பேராசிரியராக பணிபுரிகிறார்.

கடந்த பிப்ரவரியில் குடும்பத்தினருடன் சவுதிக்கு சென்றுவிட்டார். அவரது வீட்டை யா. கொடிக்குளத்தைச் சேர்ந்த அய்யங்காளை கவனித்து வருகிறார்.

ஜூன்1-ம் தேதி கவுதம் வீட்டிலுள்ள சில வேலைகளை அய்யங்காளை முடித்துவிட்டு, கொடிக்குளத்திலுள்ள அவரது வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் கவுதம் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டது பற்றி அய்யங்காளைக்கு தகவல் கிடைத்தது.

இதைத்தொடர்ந்து அவர் அங்கு  வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 வைரக் கற்கள், 16 பவுன் தங்க நகைகள், வெள்ளி, பித்தளை பொருட்கள், டிவி, லேப்-டாப், உள்ளிட்ட எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், புதிய சட்டைகள் என, பல்வேறு பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.

இது குறித்து அய்யங்காளை வீட்டு உரிமையாளர் கவுதமுக்கு தகவல் தெரிவித்தார். கவுதம் ஒத்தக்கடை போலீஸில் புகார் செய்தார். 

போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் கதவு, பீரோவில் பதிவான கைரேகைகளை சேகரித்துச் சென்றனர்.

பாதுகாப்பான குடியிருப்புக்குள் புகுந்து நடத்திய இக்கொள்ளை சம்பவம் அங்குள்ளவர்களை  அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கொள்ளை சம்பவம் குறித்து காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவன் விசாரித்து வருகிறார்.  

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

8 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

9 hours ago

மேலும்