ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு புதிய குடிநீர் திட்டம்: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

By செய்திப்பிரிவு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என்று  அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதியளித்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''குடிநீர் பிரச்சினை இருப்பதை மறுக்க முடியாது. முக்கூடல் கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வரவேண்டிய நீர் வரவில்லை. இதற்கு மோட்டார் பம்ப்பை இயக்க முடியாமல் ஏற்படும் மின்வெட்டுப் பிரச்சினையே காரணம்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூருக்கு விரைவில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும். இதுகுறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அதிகாரிகளிடமும் இதுகுறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம்.

பிரச்சினை பெரியளவில் வெடிக்காத அளவுக்கு, முதல்வரிடம் ஆலோசனை பெற்று விருதுநகர் மாவட்டத்தின் தண்ணீர்த் தேவையை நிறைவேற்றுவோம்'' என்றார் ராஜேந்திர பாலாஜி.

தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடந்த 3 ஆண்டுகளாக பருவமழை பொய்த்து விட்டது. இதனால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துவிட்டது. குடிநீர் வழங்கும் ஏரிகளும் அடியோடு வறண்டுவிட்டன. இதனால் தமிழகம் முழுவதும் குடிநீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

உலகம்

8 hours ago

ஆன்மிகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்