பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வரும் 20-ம் தேதி வெளியீடு: உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தகவல்

By செய்திப்பிரிவு

பொறியியல் மாணவர் சேர்க்கை தர வரிசைப் பட்டியல், வரும் 20-ம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

தருமபுரியில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதா வது: கடந்த மே 2-ம் தேதி பொறி யியல் சேர்க்கைக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கும் பணி தொடங்கியது. மே 31-ம் தேதி வரை இப்பணிகள் நடந்தன. இதற் கான சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூன் 3-ம் தேதி வெளி யிடப்பட்டது. தொடர்ந்து, தமிழகத் தில் உள்ள 46 சேவை மையங்கள் மூலம் ஜூன் 7 முதல் 13-ம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தமிழக பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 166 பேர் பதிவு செய்திருந்தனர். இதில், 1 லட்சத்து 4 ஆயிரத்து 418 பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது, 78.4 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டு பொறியியல் சேர்க்கைக்கு 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பதிவு செய்து, 98 ஆயிரம் பேர் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர். இது 61.6 சதவீதம் ஆகும். நடப்பு கல்வியாண்டுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நிறைவு பெற்ற நிலையில், வரும் 17-ம் தேதி தர வரிசைப் பட்டியல் வெளியிடப்பட இருந்தது.

இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி தர வரிசைப் பட்டியல் வெளியிடுவது 20-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்பின்போது சில மாணவர்களால் சில சான்றிதழ்களை உடனடியாக சமர்ப்பிக்க இயலாத சூழல் நிலவியதாக தெரியவந்தது. இதுபோன்ற சிறு சிறு பிரச்சினைகளில் இருந்தவர்கள் பெயரும் தர வரிசைப் பட்டியலில் தவறாமல் இடம்பெற வேண்டும் என்ற நோக்கத்துக்காக இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தர வரிசைப் பட்டியல் வெளியாவதற்கு முந்தைய நாள் வரை மாணவர்கள் மீண்டும் சேவை மையங்களை அணுகி அளிக்க வேண்டிய விவரங்களை நிறைவு செய்து கொள்ளலாம். ஜூன் 20-ம் தேதி வெளியாக உள்ள தரவரிசைப் பட்டியலை அன்று முதல் 4 நாட்களுக்கு இணைய தளத்தில் பார்வையிட முடியும். இந்த பட்டியலில் தவறு நேர்ந்திருந்தாலும், சந்தேகங்கள் ஏற்பட்டாலும் சென்னையில் இயங்கும் தொலைபேசி எண் களான 044-22351014 மற்றும் 22351015 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக் கலாம். தமிழக பொறியி யல் சேர்க்கைக்கு விண்ணப்பித் துள்ள மாணவர்கள் இந்த வாய்ப்புகளை முறையாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

33 mins ago

தமிழகம்

2 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்