நெய்வேலி அருகே காதலர்கள் இறந்த விவகாரம்; காரணமானவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல் 

By செய்திப்பிரிவு

நெய்வேலி அருகே காதலர்கள் இறப்புக்கு காரணமானவர் மீது காவல்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

வடலூர் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு நெய்வே லியை அடுத்த ஏ.குறவன்குப்பம் பகுதியைச் சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகாம் அமைப்பாளரான பிரேம்குமார் என்பவர் பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார். இதை தடுத்ததுடன், காவல்துறையிடம் சாட்சியம் அளித் ததற்காக இளைஞர் விக்னேஷ் கொடூரமான முறையில் படு கொலை செய்யப்பட்டுள்ளார். பிரேம்குமார் தலைமையிலான நாடகக் காதல் கும்பல்தான் விக் னேஷை கொன்றதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். அதுமட்டுமின்றி, விக்னேஷ் திருமணம் செய்துகொள்ளவிருந்த ராதிகா என்ற பெண்ணின் புகைப் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து முகநூலில் பதிவிட்டதால் அவமானமடைந்த அப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

இந்தக் கொடூரச் செயல்கள் கண்டிக்கத்தக்கவை. வன் கொடுமை தடுப்புச் சட்டம் கொடுக் கும் சட்டவிரோத பாதுகாப்பும் நாடகக் காதல் கும்பலின் அத்து மீறலுக்கு வக்காலத்து வாங்கும் சில அரசியல் கட்சித் தலைவர் களும்தான் இத்தகைய சூழலுக்குக் காரணம்.

இவற்றை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டிய கடலூர் மாவட்டக் காவல்துறை குற்றவாளிகளுக்கு சாதகமாகவே செயல்பட்டு வருகிறது. பாதிக்கப் பட்ட மக்கள் விடிய, விடிய மறியல் போராட்டம் நடத்தியும் இந்த வழக் கில் குற்றவாளிகளை பிடிக்க காவல்துறை தீவிரம் காட்ட வில்லை. பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு ஆதரவாக இருக்க வேண் டிய கடலூர் மாவட்ட காவல் துறை, குற்றவாளிகளுக்கு சாதக மாக செயல்படுவதை கைவிட வேண்டும். இதற்கு காரணமாக இருந்தவர்களை கைது செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்