நம்பிக்கை இல்லா தீர்மானம் விவகாரம்: வரும் 29-ம் தேதி வரை பொறுப்போம்- ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் பதில்

By செய்திப்பிரிவு

நம்பிக்கை இல்லாதீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டதற்கு பதிலளித்த ஓபிஎஸ் வரும் 29-ம் தேதி வரை பொறுப்போம் என்று பதிலளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நம்பிக்கை இல்லா தீர்மானத்தை அதிமுக ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்து பேசிய துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூறியதாவது:

“தெலுங்கு தேசம் கொண்டுவரும் நம்பிக்கை இல்லா தீர்மானம் அவர்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு கொண்டு வருவது. எநாம் காவிரி மேலாண்மை அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறோம். இரண்டும் ஒன்றல்ல, இரண்டையும் ஒன்றிணைத்து முடிச்சு போட வேண்டாம். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தி அதன் தீர்மானங்களை அனுப்பி வைத்துள்ளோம்.

காவிரி மேலாண்மை அமைக்கும் காலக்கெடு முடிய மார்ச் 29 வரை நாள் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முடிவெடுக்க வரும் 29-ம் தேதி வரை பொறுத்திருப்போம். நடவடிக்கை எடுக்கவில்லை எனில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்போம்

உச்சநீதிமன்றம் விதித்த 6 வார காலக் கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என நம்பிக்கை உள்ளது. காவிரியையும், ஆந்திர மாநில விவகாரத்தை ஒப்பிட வேண்டாம். ஒருவேலை நடவடிக்கை இல்லை என்றால் அப்போது மீண்டும் எதிர்க்கட்சிகள் கூடி முடிவெடுப்போம்.”

இவ்வாறு தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 min ago

ஓடிடி களம்

2 mins ago

இந்தியா

11 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்