பாஜக கூட்டணியில் ஏன் இணைய வேண்டும்?- ராமதாசிடம் எடுத்துரைத்த அன்புமணி

By செய்திப்பிரிவு

மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது ஏன் அவசியம் என்று பாமக நிறுவனர் ராமதாசுக்கு அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் எடுத்துரைத்ததாக தெரிகிறது.

மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்க பாமக ஆயத்தமாகி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணனும் பாமகவுடன் தேர்தல் கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆரம்பத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் தயக்கம் காட்டிய பாமக நிறுவனர் ராமதாசுக்கு கட்சியை வலுப்படுத்த இந்த தேர்தல் வெற்றி கட்டாயம் என்றும் அதனால் பாஜகவுடன் கூட்டு சேர வேண்டும் அவசியம் என்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் எடுத்துரைத்ததாக, அக்கட்சி வட்டாரம் தெரிவிக்கிறது.

பாஜக கூட்டணி அமைப்பதில் ராமதாசுக்கு எந்த வித கருத்து வேறுபாடு இல்லாவிட்டாலும் தேமுதிக அந்த கூட்டணியில் இணையும் என்பதால் ராமதாஸ் தயக்கம் காட்டியதாக கூறப்படுகிறது.

அன்புமணியின் வாதங்களை கேட்ட பிறகு, கூட்டணி விஷயத்தில் முடிவை அன்புமணி கையில் ராமதாஸ் ஒப்படைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. அன்புமணி மட்டும் அல்லாமல் பாமக சார்பில் இதுவரை அறிவிக்கப்பட்டுள்ள 10 வேட்பாளர்களும் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியை விரும்புவதாகவும் கட்சி வட்டாரம் தெரிவித்துள்ளது.

இத்தகைய சூழலில் பாஜக - பாமக நிர்வாகிகள் சந்திப்பு நாளை (வியாழக்கிழமை) சென்னையில் நடைபெறுகிறது. இந்த சந்திப்பின் போது கூட்டணி, தொகுதி உடன்பாடு ஆகியன குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

16 mins ago

தமிழகம்

33 mins ago

வாழ்வியல்

24 mins ago

இந்தியா

38 mins ago

தமிழகம்

59 mins ago

சினிமா

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்