இடைத்தேர்தல் முடிவுகள்: பெரம்பூரில் அமமுகவை முந்திய மக்கள் நீதி மய்யம்

By செய்திப்பிரிவு

பெரம்பூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அமமுக வேட்பாளர் வெற்றிவேலை முந்தி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் பிரியதர்ஷினி மூன்றாம் இடத்தைக் கைப்பற்றியுள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை இன்று (மே 23) நடைபெற்று வருகிறது.

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து பெரம்பூர், பூந்தமல்லி, திருப்போரூர், பாப்பிரெட்டிபட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், அரூர், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், தஞ்சாவூர், நிலக்கோட்டை, ஆம்பூர், சாத்தூர், குடியாத்தம், விளாத்திகுளம், திருவாரூர் மற்றும் ஒசூர் ஆகிய 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து உறுப்பினர்கள் மறைவு மற்றும் தகுதிநீக்கம் காரணமாக காலியாக இருந்த மீதமுள்ள நான்கு தொகுதிகளான திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மே 19-ம் தொகுதி தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில் பெரம்பூர் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஆர்.எஸ்.ராஜேஷ் 1,824 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். அதே நேரத்தில் திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் 5,302 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். அமமுக வேட்பாளர் வெற்றிவேல் வெறும் 648 வாக்குகளை மட்டுமே முதல்கட்டமாகக் கைப்பற்றியுள்ளார்.

ஆச்சர்யப்படுத்தும் விதமாக மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரியதர்ஷினி, வெற்றிவேலை முந்தி 1,318 மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்

நான்காம் இடத்துக்குத் தள்ளப்பட்ட அமமுக வேட்பாளர் வெற்றிவேல், கடந்த முறை பெரம்பூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

வணிகம்

41 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்