எம்எல்ஏ பதவியை இன்று ராஜினாமா செய்கிறார் வசந்தகுமார்

By செய்திப்பிரிவு

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால் எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப் பதாக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் எச்.வசந்தகுமார் தெரிவித்து உள்ளார்.

கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் நாங்குநேரி தொகுதி யில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட எச்.வசந்த குமார், நடந்து முடிந்த மக்கள வைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார்.

இன்னும் சில நாட்களில் அவர் மக்களவை உறுப்பினராக பதவியேற்க இருப்பதால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலக மான அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டா லினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். பின்னர், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வது குறித்து ஆலோசனை நடத்தினார்.

ஸ்டாலினுக்கு நன்றி

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கன்னியாகுமரி தொகுதியில் எனது வெற்றிக்கும், தமிழகம் முழுவதும் திமுக கூட்டணியின் வெற்றிக்கும் பாடுபட்ட ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தேன். எம்.எல்.ஏ.வாக இருக்கும் நான் எம்.பி. தேர்தலிலும் வெற்றி பெற்றுள்ளேன்.

எனவே, எம்.பி. பதவியை தக்க வைத்துக் கொண்டு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்ய முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக ஸ்டாலினிடம் ஆலோசித்தேன். தமிழக காங் கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி யிடமும் பேசினேன். அவர்கள் ஆலோசனைப்படி இந்த முடிவை எடுத்துள்ளேன். தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் நேரம் ஒதுக்கினால் திங்கள்கிழமை (இன்று) ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வணிகம்

17 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

47 mins ago

இந்தியா

41 mins ago

தமிழகம்

58 mins ago

வாழ்வியல்

49 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்