மதுரையில் ஒரே நாளில் பயங்கரம்: சகோதரர்கள் உட்பட 5 பேர் வெட்டிக் கொலை

By செய்திப்பிரிவு

மதுரை நகரில் 16 மணி நேரத்துக்குள் சகோதரர்கள் உட்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களை அச்ச மடைய வைத்துள்ளது.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் மீனாம்பிகை நகர் 8-வது வீதியைச் சேர்ந்த குண்டுமலை மகன்கள் கருப்புராஜா(19), பாம்பு நாகராஜ்(18). சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட்டனர். தாய் இருளாயி பழங்களை விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். சில ஆண்டுகளாக பாம்பு நாகராஜும், கருப்புராஜாவும் கட்டுமான வேலைக்குச் சென்று வந்தனர். அப்போது, பிரபல ரவுடியான அப்பளராஜா கும்பலுடன் தொடர்பு ஏற்பட்டது. இருவரும் அந்தக் கும்பலுடன் சேர்ந்து அடிதடிகளில் ஈடுபட்டு வந்தனர்.

இதனால், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரபல ரவுடியான கவா திருப்பதியின் கும்பலுக்கு இவர்கள் மீது கோபம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக, பலமுறை தகராறும் நடந்ததால் பயந்துபோன இருளாயி, தனது மகன்கள் இருவரையும் கோயம்புத்தூருக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.

கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கிருந்த இருவரும் நேற்று அதிகாலை மதுரையிலுள்ள தங்களது வீட்டுக்கு வந்தனர். இதே பகுதியிலுள்ள கோவலன் தெருவைச் சேர்ந்தவரும், கோவையில் இவர்களுடன் சேர்ந்து வேலை செய்தவருமான கார்த்திக்(22) என்பவரும், கடந்த வாரம் மதுரை யிலுள்ள தனது வீட்டுக்கு வந்திருந்தார்.

தப்ப வழியில்லை

நண்பர்கள் வந்திருந்த தகவலையறிந்த கார்த்திக், நேற்று மதியம் அவர்களது வீட்டுக்குச் சென்று கருப்புராஜா, பாம்பு நாகராஜுடன் பேசியபடி டிவியில் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் மூன்று பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டி, கத்தியால் குத்தினர். 8 அடி நீளம், 8 அடி அகலம் மட்டுமே கொண்ட அந்த வீட்டில் மூவராலும் தப்பி ஓட முடியவில்லை.

கை, கால், கழுத்து, உடல் என மூன்று பேரையும் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துவிட்டு அந்த கும்பல் தப்பிச் சென்றது.

5 தனிப்படைகள் அமைப்பு

சத்தம் கேட்டு, அருகிலுள்ள மற்றொரு வீட்டிலிருந்த கருப்பு ராஜாவின் தாத்தா சுப்பையா அங்கு வந்து பார்த்தார். அப்போது வீடு முழுவதும் ரத்தம் பரவி கிடந்ததுடன், 3 பேரும் இறந்து கிடந்ததால் அதிர்ச்சியடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் இதுபற்றி ஜெய்ஹிந்த்புரம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர்.

மாநகர சட்டம் ஒழுங்கு துணை ஆணையர் சமந்த் ரோஹன் ராஜேந்திரா, உதவி ஆணையர் துரைசாமி மற்றும் அதிகாரிகள் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

மோப்ப நாய் சம்பவ இடத்திலிருந்து மீனாம்பிகை நகர் 6-வது தெரு வழியாக மெயின்ரோட்டுக்குச் சென்றது. எனவே கொலையாளிகள் இந்த வழியாகத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகித்துள்ளனர். 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலைச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

திமுக பிரமுகர் கொலை

மற்றொரு சம்பவத்தில், மதுரை புதூரைச் சேர்ந்தவர் வேலு. 45-வது திமுக வட்டச் செயலாளர். இவரது மகன் முத்துப்பாண்டி (31). 1-ம் பகுதி திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் புதூர் ஐடிஐ பஸ் நிறுத்தத்திலுள்ள பெட்டிக்கடை முன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்குவந்த ஒரு கும்பல் முத்துப்பாண்டியை சரமாரி யாக வெட்டினர். இதில் சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார்.

இவரது முதல் மனைவி பூரணப்பிரியா தற்கொலை செய்து கொண்டதற்கு முத்துப்பாண்டி தான் காரணம் என நினைத்து அவரது உறவினர்கள் கொலை செய்தி ருக்கலாம் எனத் தெரிய வந்தது. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பந்தல் அமைப்பாளர் கொலை

மதுரை தல்லாகுளம் கண்மாய் மேலத்தெருவைச் சேர்ந்தவர் கருப்பையா(32). பந்தல் அமைக் கும் தொழில் செய்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி என்பவருக்காக ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10.30 மணியளவில் ஆசாரி தெருவிலுள்ள கருணாநிதியின் வீட்டருகே கருப்பையா, அவரு டன் சேர்ந்து தொழில் செய்து வரும் கவிக்குமார், ராமகிருஷ் ணன் ஆகியோர் பேசிக் கொண்டி ருந்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் 3 பேரையும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் கருப்பையா சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அsடைந்த ராம கிருஷ்ணன், கவிக்குமாருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பண விவகாரத்தில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதற்கி டையே, இவ்வழக்கு தொடர்பாக ரமேஷ், அய்யாவு ரமேஷ், சுரேஷ் உள்பட 6 பேர் மேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

மதுரையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி முதல் நேற்று பகல் 2 மணி வரை 16 மணி நேரத்துக் குள் 5 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் பெரிதும் அச்ச மடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

5 hours ago

உலகம்

6 hours ago

விளையாட்டு

6 hours ago

வேலை வாய்ப்பு

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

7 hours ago

கல்வி

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்