ஆதரவற்றோர் சடலங்களை கைவண்டியில் இழுத்து சென்று புதைக்கும் சந்திரகுரு: நிரந்தர ஊதியம் இல்லாமல் தவிப்பு

By செய்திப்பிரிவு

சாதாரண பழங்கால கைவண்டியை புதுவை வரும் பலரும் பார்த்திருப்பார்கள். ஆனால் புதுவையை சேர்ந்தோர் பலரும் வண்டியை பார்த்தவுடன் விலகிக் கொள்வார்கள். அருகே வண்டி வர பலரின் கைகள் மூக்கை மூடும். அந்த வண்டியின் மேல் "அனாதை பிணம் வண்டி- பாண்டிச்சேரி முனிசிபாலிட்டி" என எழுதிய எழுத்துகள் மங்கி கிடக்கும். இவ்வண்டியை இழுத்து செல்பவர் சந்திரகுரு.

ஆதரவற்றோர் சடலங்களை கைவண்டியில் இழுத்து சென்று பள்ளம் தோண்டி புதைக்கும் பணியில் 18 ஆண்டுகளாக ஈடு பட்டு வருகிறார் புதுவை திப்பு ராயப்பேட்டையைச் சேர்ந்த தொழி லாளி சந்திரகுரு. இவருக்கு சட லத்துக்கு ரூ.100 மட்டுமே தருகி றார்கள். நிரந்தர ஊதியத்துக்காக எம்எல்ஏ, அமைச்சர் தொடங்கி முதல்வர் வரை கோரிக்கை வைத்தும் நிறைவேறாமல் காத்துக்கிடக்கிறார்.

புதுவையில் அதிகளவு மருத்துவமனைகள் இருப்பதாலும், மது குடிக்கவும், சுற்றுலா தளம் என்பதாலும் ஏராளமானோர் வருகின்றனர். அதில் ஆதரவற்றோர் கணிசமாக உள்ளனர். முதியோர், ஆதரவற்றோர் மற்றும் நோயால் பாதிக்கப்பட்டோர் இறந்து போனால் அவர்களின் உடலை வாங்க யாரும் வருவதில்லை.

தகவல் அறியும் போலீஸார் ஆதரவற்றோரின் சடலத்தை அரசு மருத்துவமனையில்வைப்பார்கள். பிரேத பரிசோதனை செய்து அதை புதைத்து விடுகின்றனர். தினசரி 2 முதல் 5 வரை என மாதந்தோறும் 90க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டு புதைக்கப்படுகின்றன.

ஆதரவற்ற சடலங்களை எடுத்து புதைக்கும் பணியில் சந்திரகுரு ஈடுபடுகிறார். புதுவையில் இறக்கும் ஆதரவற்றோர் சட லங்களை கைவண்டியில் எடுத்து சென்று வம்பாகீரப்பாளையம் சுடு காட்டில் புதைக்கிறார். அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்த ஆதர வற்றோர் சடலங்களையும், லாஸ்பேட்டை முதியோர் இல்லம், அரசு லெப்ரசி மருத்துவமனை ஆகிய இடங்களில் இறப்போரையும் அவர்தான் புதைக்கிறார்.

இதுதொடர்பாக சந்திரகுரு கூறும்போது:

கடந்த 18 ஆண்டுகளாக இப்பணி செய்கிறேன். நிலையான ஊதியம் இல்லை. நகராட்சி சார்பில் அடையாள அட்டை தருகிறார்கள். ஒரு சடலத்துக்கு ரூ.100 மட்டுமே வழங்கப்படும். அதுவும் சரியாக கிடைப்பதில்லை. சடலங்களை இழுக்கும் வண்டியோ மோசமாக இருக்கிறது. மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். குடும்பம் நடத்தவே சிரமமாக உள்ளது.

நகராட்சியில் துப்புரவு பணியோ, நிரந்தர ஊதியமோ இதில் ஏதாவது தரக்கோரி எம்எல்ஏ தொடங்கி அமைச்சர், முதல்வர் என பலரிடமும் முறையிட்டும் பயனில்லை. சடலங்களை எடுத்து செல்லும்போது தொற்றுநோய் வரவும் வாய்ப்புண்டு. தடுப்பூசியெல்லாம் போட்டதில்லை. நிரந்தர ஊதியம் கிடைக்க ஏதாவது உதவி செய்யுங்கள் என்று கோரிக்கை வைக்கிறார்.

சந்திரகுருவை அனைத்து போலீஸாருக்கும் நன்கு தெரி ந்துள்ளது. போலீஸார் பலருக்கும் அவரது உதவி மிகத்தேவை. சந்திர குரு நிலை தொடர்பாக அவர்கள் கூறும்போது, "ஆதரவற்றோர் சடலத்தை புதைக்கும் பணியை முன்பு கிருஷ்ணவேணி செய்தார். தற்போது சந்திரகுரு மட்டும் செய்கிறார். கைவண்டியில் சடலத்தை எடுத்து சென்று பள்ளத்தை அவரே தோண்டி புதைக்க வேண்டும். பழங்காலத்தில் தரப்பட்ட கைவண்டியில்தான் இப்பணியை செய்கிறார். மோட்டார் பொருத்திய வாகனத்தை அளித்தால் மிக உதவியாக இருக்கும். நிரந்தர வேலையை அரசு தர வேண்டும். நாங்கள் சிறிது நாட்களுக்கு முன்பு அவரை அழைத்து அவர் செய்யும் உயரிய பணிக்காக கவுரவித்தோம். அரசும் உதவவேண்டும் என்கின்றனர்.

சட்டப்பேரவை நடைபெறும் இவ்வேளையில் உயர்ந்த பணியை செய்யும் இவரை போன்றோரை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும் என்பதே புதுவை வாசிகளின் எண்ணம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

இந்தியா

14 mins ago

உலகம்

14 mins ago

இந்தியா

25 mins ago

இந்தியா

58 mins ago

இந்தியா

1 hour ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்