தே.ஜ. கூட்டணியுடன் எந்த தொடர்பும் இல்லை: தமிழருவி மணியன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தேசிய ஜனநாயக கூட்டணியுடன் எந்த தொடர்பும் இல்லை என்று காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை யில் கூறியிருப்பதாவது:

மத்தியில் பல்வேறு ஊழல்களை செய்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை ஆட்சியில் இருந்து அகற்றவும், தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளின் பிடியிலிருந்து மக்களை விடுவிக்கவும், மாற்று அரசியலை இந்த மண்ணில் வளர்த்தெடுக்கவும் தேசிய ஜனநாயக கூட்டணி அமைவதில் காந்திய மக்கள் இயக்கம் தனது பங்களிப்பைத் தந்தது.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் இலங்கை அரசின் மீது கடுமையான நிபந்தனைகளை விதிக்க வேண்டும். தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்ற நிபந்தனைகளை மத்திய மற்றும் மாநில பாஜக தலைவர் களிடம் வைத்துதான் மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உருவாக்கப்பட்டது.

ஆனால் மோடியின் அரசு பொறுப்பேற்று 100 நாள்கள் கடந்த நிலையில் நிபந்தனைகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. எந்த வகை யிலும் தமிழ் இனத்தின் எதிர்பார்ப் புக்கு ஏற்ப செயல்படாத தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் காந்திய மக்கள் இயக்கத்துக்கும் இடையே ஒரு தொடர்பும் இல்லை என்று தமிழருவி மணியன் தெரிவித் துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

சினிமா

6 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

12 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

13 hours ago

மேலும்