தேர்தலைப் புறக்கணிக்கும் மதுராந்தக மக்கள்: மருத்துவக் கழிவு ஆலையை மூடாத அரசைக் கண்டித்து தொடர் காத்திருப்பு போராட்டம்

By கோ.கார்த்திக்

மதுராந்தகம் அடுத்த கே.கே.பூதூர் வாக்குச் சாவடியில் இதுவரையிலும் ஒரு வாக்கு கூட பதிவாகவில்லை. மருத்துவ கழிவுகளை எரிக்கும் தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டும் என்றுகூறி 17-வது நாட்களாகப் போராடி வரும் கிராம மக்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 34, கே .கே.புதூர் கிராமத்தில் 943 ஓட்டுகள் உள்ளன. இதில் இதுவரை (காலை 11.45 நிலவரப்படி) ஒரு வாக்கு கூடப் பதிவாகவில்லை. மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ளனர்.

இந்த கிராமத்தில் உள்ள மருத்துவக் கழிவுகளை எரிக்கும் ஆலை பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதாக கூறி கிராம மக்கள் கடந்த ஒரு மாத காலமாக இந்த ஆலையை மூடுவதற்கு பல விதப் போராட்டங்களை நடத்தினர். ஆனால் அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் தேர்தலைப் புறக்கணித்து வருகின்றனர். அதிகாரிகள் எழுத்துப் பூர்வமாக உத்தரவாதம் தந்தால் வாக்களிப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி வருகை தந்து போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், கிராம மக்கள் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதே வாக்குச் சாவடியில் உள்ள இருசமநல்லூருக்கான வாக்குப்பதிவில் இதுவரை 18 வாக்குகள் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்து.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்