7 இடத்தில் முதல்வர் பிரச்சாரம்: ஹெச்.ராஜாவுக்கு எகிறிய செலவு

By இ.ஜெகநாதன்

தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர அந்தஸ்துள்ள தலைவர்கள் தொகுதிக்கு ஒன்று (அ) இரண்டு இடங்களில் மட்டும் பிரச்சாரம் செய்வர். அதில் அவர்கள் வேட்பாளர்கள் பெயரைச் சொல்லி வாக்கு கேட்டாலும் பெரிய அளவில் செலவுத் தொகை வேட்பாளர் கணக்கில் வராது. ஆனால் நட்சத்திர அந்தஸ்துள்ள முதல்வர் பழனிசாமி சிவகங்கை தொகுதியில் ஏப். 1 அன்று புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர், காரைக்குடி ஆகிய 3 இடங்களிலும் நேற்று சிவகங்கை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய 4 இடங்களிலும் பிரச்சாரம் செய்தார்.

இந்த 7 இடங்களிலும் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். இதனால் கூட்டத்துக்காக மேடை, கலைநிகழ்ச்சி, கொடி, தோரணங்கள், மைக், ஸ்பீக்கர் உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் ஹெச்.ராஜாவின் தேர்தல் செலவுக் கணக்கில் சேர்க்கப்பட உள்ளது.

மேலும் இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் ஆகிய மூன்று இடங்கள் மானாமதுரை சட்டப்பேரவை தொகுதிக்குள் வருவதால் அதிமுக வேட்பாளர் நாகராஜனையும் ஆதரித்து பேசினார். இதனால் மூன்று இடங்களுக்கான செலவுத் தொகை மட்டும் இரண்டாக பிரித்து ஹெச்.ராஜா மற்றும் நாகராஜன் செலவு கணக்கில் சேர்க்கப்பட உள்ளது. இதனால் ஹெச்.ராஜா செலவு கணக்கு எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வேட்பாளரின் பெயரைக் கூறி முதல்வர் வாக்கு கேட்டதால், செலவுக்கான கண்காணிப்புக் குழுவினர் பிரச்சார மொத்த செலவையும் கணக்கிட்டு வேட்பாளர்கள் கணக்கில் சேர்த்துவிடுவர். பாதுகாப்பு ஏற்பாடுகளை தவிர, மற்றவை வேட்பாளர் கணக்கிலேயே சேர்க்கப்படும். பிரச்சாரம் முழுவதும் வீடியோ எடுத்துள்ளதால் எந்த செலவும் விட்டு போகாது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

12 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

சுற்றுலா

5 hours ago

கல்வி

4 hours ago

மேலும்