கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம்; ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

By செய்திப்பிரிவு

ஆசிய தடகளப் போட்டியில், தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில். "தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவுக்கும், அதே போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4x400 மீட்டர் தொடர்  ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை புரிந்திருக்கும் ஆரோக்கிய ராஜீவுக்கும் திமுக சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விளையாட்டுத் துறையில் இந்த இருவரும் நிகழ்த்தியுள்ள சாதனைகளை ஊக்குவித்து, உற்சாகப்படுத்தும் வகையில் கோமதி மாரிமுத்துவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதியும், ஆரோக்கிய ராஜீவுக்கு ஐந்து லட்சம் ரூபாய் நிதியும் திமுகவின் சார்பில்  வழங்கப்படுகிறது.

இந்தியாவுக்கான இவர்களின் சாதனைகள் மென்மேலும் தொடர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

11 hours ago

வலைஞர் பக்கம்

12 hours ago

இந்தியா

12 hours ago

மேலும்