சாலை வசதிக்கு நிதின் கட்கரியை பாராட்டிய சு.சுவாமி; கிண்டலடித்த மாணிக்கம் தாகூர்

By செய்திப்பிரிவு

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மதுரை - திண்டுக்கல் சாலையை பாராட்டி இட்ட பதிவை கிண்டல் செய்துள்ளார் விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்.

சுப்பரமணியன் சுவாமி தனது ட்விடட்ரில், "மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் சென்றபோது அமெரிக்க தேசிய நெடுஞ்சாலைக்கு நிகரான அழகான சாலைகள் இருந்தன. நிதின் கட்கரிக்கு வாழ்த்துகள்" எனப் பதிவிட்டிருந்தார்.

இதனை சுட்டிக் காட்டிய விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர், "அது நிதின் கட்கரி அல்ல. டி.ஆர்.பாலு அமைத்த சாலை வசதி. இது ஒன்றே போதும் நீங்கள் தமிழக சாலைகளில் பயணம் செய்து எவ்வளவு காலம் ஆகிவிட்டது என்பதை உணர்த்த" என கிண்டல் ட்வீட்டை பதிவிட்டுள்ளார்.

நிதின் கட்கரி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் மற்றும் நீர்வள ஆதாரங்கள் மற்றும் கங்கை தூய்மைபடுத்துதல் துறைகளின் அமைச்சராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வணிகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

க்ரைம்

5 hours ago

இந்தியா

5 hours ago

சினிமா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்