21 தமிழக மீனவர்கள், 64 படகுகளை இலங்கையிடம் இருந்து மீட்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்

By செய்திப்பிரிவு

இலங்கை சிறைகளில் வாடும் 21 தமிழக மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 64 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களைத் துன்புறுத்த வும், அச்சுறுத்தவும் புதிய உத்தியை இலங்கை கடற் படையினர் கையாண்டு வருகின்றனர். சமீபகாலமாக, நடுக்கடலில் மோசமான வானிலை அல்லது கோளாறு காரணமாக செயலிழந்து நிற்கும் படகுகளில் இருப்பவர்களைக் காப்பாற்றச் செல்லும் படகுகளையும், அவற்றில் உள்ள இந்திய மீனவர்களையும் குறிவைத்து பிடித்துச் செல்கின்றனர்.

ராமநாதபுரத்தில் இருந்து கடந்த 8-ம் தேதி புறப்பட்டுச் சென்ற ஒரு படகு செயலிழந்து நடுக்கடலில் தத்தளித்தபோது, அதில் இருந்த 6 மீனவர்களையும், படகோடு இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து தலைமன்னாருக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கடந்த செப்டம்பர் 1, 2-ம் தேதிகளிலும் இருவேறு சம்பவங்களில் இதுபோல, கடலில் மூழ்கிய படகில் இருந்து குதித்து தப்பித்து தத்தளித்தவர்களையும், அவர்களை மீட்கச் சென்ற 15 மீனவர்களையும் அவர்களது படகையும் இலங்கை கடற்படை யினர் பிடித்துச் சென்றனர்.

மீனவர்களின் படகுகளைப் பறிமுதல் செய்வது அவர்களது வாழ்வாதாரத்தைப் பறிப்பது போலாகும். இதுதவிர மேலும் 63 படகுகள் இலங்கைவசம் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கினால் அவை பாழாகிவிடும்.

இச்சம்பவங்கள் கச்சத் தீவை மீட்கவேண்டியதன் அவசி யத்தைக் காட்டுகிறது. பாரம் பரியமாகவும், வரலாற்று ரீதியிலும் அது இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதே மாநில அரசின் நிலைப்பாடு. கச்சத்தீவை மீட்பதே மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

எனவே, ஏற்கெனவே சிறை பிடிக்கப்பட்ட 15 பேர் உட்பட 21 மீனவர்களையும், 64 படகு களையும் மீட்க இலங்கை அரசிடம் பேசி உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். தங்களது தலைமையிலான இந்திய அரசு இப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வை எடுக்கும் என்று உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்