முன்பதிவு செய்த குடும்பத்தை 350 கி.மீ. நின்றபடி பயணிக்க வைத்த அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்: ரூ.36 ஆயிரம் அபராதம் விதித்த நுகர்வோர் தீர்ப்பாயம்

By செய்திப்பிரிவு

முன்பதிவு செய்த பயணிகளுக்கு இருக்கை வழங்காமல், 350 கி.மீ. நிற்க வைத்து பயணிக்க வைத்த தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு 36 ஆயிரம் அபராதம் விதித்து அத்தொகையை பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு டிக்கெட் கட்டணத்துடன் திருப்பி வழங்க சென்னை நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

போரூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் கடந்த 2010-ம் ஆண்டு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்காக 1,155 ரூபாய் கொடுத்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருத்தில் முன்பதிவு செய்தார்.

ஆனால், அவர் அரசு விரைவுப் பேருந்தில் பயணம் மேற்கொள்ளச் சென்ற போது பேருந்தின் நடத்துநர் சீட் இல்லை எனக் கூறி இருக்கை வழங்க மறுத்துவிட்டார். இதனால் அஜீஸ் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 8 பேரும் 350 கி.மீ . தொலைவிற்கு நின்றபடியே பயணித்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் தீர்ப்பாயத்தில் 2 லட்ச ரூபாய் இழப்பீடு கேட்டு அப்துல் அஜீஸ் புகார் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த தீர்ப்பாயத் தலைவர் எம் மோனி,முன்பதிவு செய்த பயணி மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு பேருந்தில் இருக்கை வழங்காமல் நிற்க வைத்துப் பயணிக்க வைத்த காரணத்திற்காக, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 36 ஆயிரத்து 203 ரூபாயை டிக்கெட் கட்டணத்துடன் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

சினிமா

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

மேலும்