குடியிருப்பு, தெருக்களில் கூட்டம், பேரணிக்கு தடை

By செய்திப்பிரிவு

குடியிருப்புப் பகுதிகளில் தெரு மூலைகள், சாலைகள், பாதை யோரங்களில் பொதுக்கூட்டம், பேரணி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச் செந்தூர் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளிலும் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள் நடத்தத் தடை விதிக்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி.நாராயணன் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு பிறப்பித்த உத்தரவு:

அரசியல் கட்சிகள் நகரங்களில் குடியிருப்பு பகுதிகளில் பொதுக் கூட்டங்கள், பேரணிகள் நடத்தும் போது அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அமைதியாக வாழ்வதிலும், பாதைகளைக் கடப்பதிலும் பல் வேறு சிரமங்களை சந்திக்கின்ற னர். இந்தப் பாதிப்பு தேர்தல் காலங்களில் அதிகமாக இருக்கும்.

தமிழகத்தில் ஏப். 18-ல் மக்க ளவைத் தேர்தலும், சட்டப் பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது. இந்த நேரத்தில் அரசியல் கட்சிகள் அதிகளவில் பொதுக்கூட்டம், பேரணி நடத்தும். இதனால் இந்த வழக்கில் உள்துறை முதன்மைச் செயலர், டிஜிபி ஆகியோரை நீதிமன்றம் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாகச் சேர்க்கிறது.

குடியிருப்புப் பகுதிகள், சாலைகள், தெரு மூலைகள், பாதையோரங்களில் பொதுக்கூட் டம், பேரணி நடத்த அதிகாரிகள் அனுமதி வழங்கக்கூடாது. அதே நேரத்தில் புறநகர் பகுதிகளில் கட்சிகளுக்குப் பொதுக்கூட்டம், பேரணி நடத்த அனுமதி வழங்க லாம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஏப் .5-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

2 hours ago

உலகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

வேலை வாய்ப்பு

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

கல்வி

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

மேலும்