‘நானும் காவலாளிதான்’ என்ற பிரச்சாரம்: 31-ம் தேதி மக்களுடன் பிரதமர் கலந்துரையாடல்

By பிடிஐ

‘நானும் காவலாளிதான்’ என்ற பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில் வரும் 31-ம் தேதி மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த சனிக்கிழமை கூறும்போது, “ஊழல் மற்றும் சமூகக் கொடுமை களுக்கு எதிரான போரில் நான் தனி ஆள் இல்லை” என்றார். மேலும் தனது ஆதரவாளர்கள் அனை வரும் ‘நானும் காவலாளிதான்’ என உறுதிமொழி ஏற்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதையடுத்து அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் தங்கள் ட்விட்டர் கணக்குகளில் தங்கள் பெயருக்கு முன்னால் சவுகிதார் (காவலாளி) என சேர்த்துக்கொண்டனர்.

இந்நிலையில் பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சரு மான ரவிசங்கர் பிரசாத் நேற்று கூறும்போது, “பிரதமரின் ‘நானும் காவலாளிதான்’ பிரச்சாரத்தை தீவிரப்படுத்தும் வகையில், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ள மக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி வரும் 31-ம் தேதி கலந் துரையாட உள்ளார். நாட்டின் 500 இடங்களில் இருந்து மக்கள், பிரதமருடன் கலந்துரையாடு வார்கள். ட்விட்டரில் ‘நானும் காவலாளிதான்’ ஹேஷ்டேக் 20 லட்சம் முறை ட்வீட் செய்யப்பட்டு, இந்த பிரச்சாரம் மக்கள் இயக்கமாக மாறி வருகிறது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

வாழ்வியல்

48 mins ago

உலகம்

46 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்