கல்லீரல் புற்றுநோய் பாதித்த பெண்ணுக்கு அறுவைச் சிகிச்சை: மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் பொருத்தப்பட்டது

By செய்திப்பிரிவு

திருவொற்றியூரை சேர்ந்தவர் ராஜமாணிக்கம் (50). இவரது மனைவி மீனா (45). மீனாவின் கல்லீரலில் புற்றுநோய் கட்டி இருந்ததால் கல்லீரல் சுருங்கியும், முற்றிலும் சேதமடைந்தும் இருந் தது. அவர் அரசு ஸ்டான்லி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சாலை விபத்தில் சிக்கி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர், கடந்த 10-ம் தேதி திடீரென மூளைச்சாவு அடைந்தார். அவரது உடல் உறுப்புகளை, உறவினர்கள் தானம் செய்தனர்.

இதையடுத்து அவரது கல்லீரலை, மீனாவுக்கு பொருத்த டாக்டர்கள் திட்டமிட்டனர். அதன் படி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்தவரின் கல்லீரல் அகற்றப் பட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட்டது.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர் மனோகரன், இரைப்பை, குடல் மற்றும் கல்லீரல் மருத்துவத் துறை தலைவர் வெங்கட் ராமன், பேராசிரியர்கள் ரவிச்சந்திரன், ஜஸ்வந்த் தலைமையிலான 22 டாக்டர்களைக் கொண்ட குழு மீனாவின் சேத மடைந்த கல்லீரலை அகற்றி விட்டு, தானமாக கிடைத்த கல்லீரலை வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தியது.

இது தொடர்பாக அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் மீனாட்சி சுந்தரம் கூறியதாவது: மீனாவுக்கு கடந்த 10-ம் தேதி இரவு 7.30 மணிக்கு தொடங்கிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மறுநாள் பிற்பகல் 3.30 மணி வரை மொத்தம் 18 மணி நேரம் நடைபெற்றது.

சிகிச்சைக்குப் பிறகு மீனா நலமாக இருக்கிறார். இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்வதற்கு ரூ.40 லட்சம் வரை செலவாகும். ஆனால், இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்துள்ளோம்.

சிறுநீரக மாற்று சிகிச்சை

இதேபோல கல்லீரலை தானமாகக் கொடுத்த மூளைச்சாவு அடைந்தவரின் ஒரு சிறுநீரகமும் தானமாக பெறப்பட்டது. அது நங்கநல்லூரைச் சேர்ந்த தர்மசிந்து (41) என்பவருக்கு பொருத்தப்பட் டது. இவரும் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருக்கிறார்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

54 mins ago

இந்தியா

43 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்